பப்பு: கனவு நாயகி அக்காவாக மாறினார்

பப்பு: கனவு நாயகி அக்காவாக மாறினார்

2 mins read
67fe06d5-e651-4429-9725-65ee885eec0e
நடிகர் தனுஷுடன் 'விஜே' பப்பு. -

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் நேயர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர் தொலைக்­காட்சி நிகழ்ச்சி தொகுப்­பா­ளர் விஜே பப்பு.

அண்­மை­யில் தனுஷ் நடிப்­பில் வெளி­யா­கி­ இ­ருக்­கும் 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தில் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருக்­கி­றார்.

"நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு தனுஷ் சாரைப் பார்த்­தேன். அப்­போது கண்­டிப்­பாக இணைந்து பணி­யாற்­று­வோம் என்று சொன்­னார். அதுவே மிகுந்த உற்­சா­கத்­தைக் கொடுத்­தது. வாய்ப்பு கிடைக்­க­வில்லை என்­றா­லும் தனுஷ் என்ற அற்­பு­த­மான நடி­கரைச் சந்­தித்­த­தும் அவர் எனக்கு வாய்ப்பு தரு­வ­தா­கக் கூறி­யதும் எனக்­குப் போது­மா­ன­தாக இருந்­தது.

"இந்­நி­லை­யில், திடீரென ஒரு­நாள் தொலை­பேசி அழைப்பு வந்­தது. தனுஷ் சார் படத்­தில் நீங்­களும் இருக்­கி­றீர்­கள் என்று எதிர்­மு­னை­யில் இருப்­ப­வர் சொன்ன அந்­தத் த­ருணத்தை மறக்­கவே இய­லாது. அது ஒரு மாயா­ஜா­லம் போன்று தோன்­றி­யது,"

"எனக்­கான கதா­பாத்­தி­ரம் என்ன, அதற்கு எப்­ப­டித் தயா­ராவது என்று எதை­யுமே கேட்­டுக்­கொள்­ள­வில்லை. பிறகு நித்யா மேனன் தம்­பி­யாக நடிப்­பது தெரி­ய­வந்­தது.

"படத்­துக்­குப் பூசை போட்ட பிறகு, தனு­ஷும் இயக்­கு­ந­ரும் ஏதோ முக்­கி­ய­மான காட்சி குறித்து விவா­தித்­துக் கொண்­டி­ருந்­த­னர். அப்­போது என்னைப் பார்த்­த­ப­டியே இரு­வ­ரும் பேசி­ய­தும், என்­ன­வாக இருக்­கும் என்ற யோசனை மன­தில் அதி­க­ரித்­த­ப­டியே இருந்­தது.

படப்­பி­டிப்பு தொடங்­கியதும், குறிப்­பிட்ட ஒரு முக்­கி­ய­மான காட்­சிக்­கான வச­னங்­களை என்­னி­டம் தந்­த­னர். அதைப் படித்­த­போது மயக்­கம் வராத குறை­தான். இது போதா­தென்று இரு­வ­ரும் சேர்ந்து ஒரு நிபந்­த­னை­யும் விதித்­த­னர்.

"அந்­தக் காட்­சி­யில் பிர­காஷ் ராஜ், பார­தி­ராஜா, தனுஷ் என முக்­கிய நடி­கர்­கள் இருப்­பார்­கள். ஆனால், அவர்­களில் யாருக்­குமே வச­னம் இல்லை. நான் மட்­டும்­தான் பேச வேண்­டும். அது­வும் ஒரே மூச்­சாகப் பேசி­விட வேண்­டும் என்று இரு­வ­ரும் கூறி­னர்.

"முத­லில் பயந்­தா­லும் பிறகு ஆசு­வா­சப்­ப­டுத்­திக் கொண்டு, நம்­பிக்­கை­யோடு வச­னங்­களை மனப்­பா­டம் செய்­தேன். ஒரே டேக்கில் அந்­தக் காட்சி பட­மாக்­கப்­பட்­டது. தனுஷ் மிக­வும் பாராட்டி­னார்.

"படத்­தின் இறு­திக்­காட்­சியை திரை­ய­ரங்­கில் பார்த்­த­போது அழுது­விட்­டேன். இப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு கிடைக்­கும் எனக் கனவில்­கூட நினைக்­க­வில்லை.

"நித்யா மேனன் பாச­மாக நடந்து­கொண்­டார். அவ­ருக்கு உடன்­பி­றந்த தம்பி இல்லை என்­ப­தால் என்னைத் தம்­பி­யாக நினைப்­ப­தா­கக் கூறி­னார். 'ஓ காதல் கண்­மணி' படம் பார்த்­த­பின்­னர், அவர் எனது கனவு நாய­கி­யாக இருந்­தார். இப்­போது அக்­கா­வாக மாறி­விட்­டார்.

"நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு கொடுத்த வாக்­கு­று­தியை தனுஷ் நிறை­வேற்றி உள்­ளார். என்னைப் போன்­ற­வர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி வாய்ப்பு தரும் உயர்ந்த உள்­ளம் கொண்­ட­வர்," என்­கி­றார் 'விஜே' பப்பு.