'ஜெய்பீம்' படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் கண்ணீர்விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் சீனாவிலும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
இதையடுத்து தமிழ்த் திரையுலகத்தினர் பார்வை சீனா பக்கம் திரும்பி உள்ளது.
இந்நிலையில் பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்று வரும் சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை சீனாவில் நடைபெற்று வரும் பீஜிங் உலகத் திரைப்பட விழாவில் திரையிட்டனர்.
அப்போது அரங்கில் இருந்த சீன குடிமக்கள் பலரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். மேலும் சூர்யா, அனுமோல் உள்ளிட்டவர்களின் நடிப்பையும் அவர்கள் பாராட்டி உள்ளனர்.
இதுதொடர்பான காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

