அமலா: தப்பிப் பிழைத்தேன்

3 mins read
f11051a5-3221-410b-b99c-7f3e7b76167c
அமலா பால் -

'கடா­வர்' படத்­தில் தாம் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரம் தம்மை மேலும் வலி­மை­யான பெண்­ணாக மாற்றி இ­ருக்­கிறது என்­கி­றார் அமலா பால்.

அண்­மை­யில் ஓடிடி தளத்­தில் வெளி­யீடு கண்ட அந்­தப் படம் கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளது. எனி­னும் தமக்குக் குறைந்­த­பட்ச லாபம் கிடைத்­துள்­ள­தாக நிம்­ம­திப் பெரு­மூச்­சு­வி­டு­கி­றார் அமலா.

இந்­தப் படம் தமக்­குப் பல்­வேறு அனு­ப­வங்­களை­யும் நல்ல பாடங்­க­ளை­யும் தந்­துள்­ள­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

"நான் தயா­ரிப்­பா­ள­ராக மாறி­ய­தில் மகிழ்ச்­சி­தான் அதி­கம் உள்­ளது. இது­வரை சம்­ப­ளம் வாங்­கிக்கொண்டு நடித்த நான், இப்­போது சில­ருக்குச் சம்­ப­ளம் தரும் அள வுக்கு உயர்ந்­தி­ருக்­கி­றேன்.

"நல்ல கதா­சி­ரி­யர், சிறந்த இயக்குநர், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் திறமை­யான நடி­கர்­க­ளுக்கு உரிய ஊதி­யம் கொடுக்­கும் அள­வுக்கு எனக்குச் சக்தி வழங்­கி­யுள்ள கடவு­ளுக்கு நன்றி," என்­கி­றார் அமலா.

எழு­பது விழுக்­காடு அள­வுக்­குப் படப்­பி­டிப்பை நடத்தி முடித்த நிலை­யில், மீது­முள்ள படத்தை முடிக்க இரண்டு கோடி ரூபாய்க்­கும் மேல் தேவைப்­பட்­ட­தாம். அப்­போது தன் மீது நம்­பிக்கை வைத்து நிதி­யு­தவி செய்­த­வர்­களை வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க முடி­யாது என்­கி­றார்.

"இந்­தப் படத்­தில் நான் இறந்­த­வர்­க­ளின் சடலங்களைத் தோண்டி எடுத்து உடல் கூராய்வு நடத்­து­வ­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். ஒரு கட்­டத்­தில் இரண்டு கோடி ரூபாய் தேவை என்ற நிலை ஏற்­பட்­ட­போது, நானும் ஒரு சட­லத்­தைப் போல் வலம் வரு­வ­தா­கவே உணர்ந்­தேன்.

"படத்தை முடிக்க முடி­யுமா என்­கிற நம் பிக்கை போய், கிட்டத் தட்ட நடைப்­பிணமா கவே மாறத் தொடங்கி­னேன். இடைப்­பட்ட காலத்­தில் இரண்டு ஆண்­டு­களைக் கொரோனா எடுத்­துக்கொண்­டது. அந்­தச் சம­யத்­தில் அனைத்து வகை­யி­லும் சிர­மப்­பட்­டேன். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு என் தந்தை திடீ ரெனக் கால­மா­னது ஈடுசெய்ய முடி­யாத இழப்பு. அந்தத் துக்­கத்­தில் இருந்து நானும் அம்­மா­வும் எப்­போது மீள்­வோம் என்று தெரி­ய­வில்லை," என்­கி­றார் அமலா பால்.

சில தவிர்க்க இய­லாத கார­ணங்­க­ளால் 'கடாவர்' படம் ஓடிடி தளத்­தில் வெளி­யா­ன­தா­கக் குறிப்­பிடு­ப­வர், தமக்கு பொரு­ளி­யல் ரீதி­யில் நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தாத திரைப்­ப­டத்தைத் தயா­ரித்து, நடித்­த­தில் மன­நி­றைவு இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

"படம் தயா­ரா­ன­தும் விநி­யோ­கஸ்­தர்­க­ளுக்­குப் போட்­டுக்காட்டி கருத்­து கேட்­ட­போது கல­வை­யான விமர்­ச­னங்­கள் வந்­தன. சிலர், இது ஓடி­டிக்கு பொருத்­த­மான படம் என்­றார்­கள். இன்­னும் சிலர், மிகக் குறைந்த விலைக்கு பட வெளி­யீட்டு உரிமை­யைக் கேட்­ட­னர்.

"அந்த நேரம் பார்த்து என் நல­னில் அக்­கறை உள்­ள­வர்­கள் குறிப்­பிட்ட ஒரு ஓடிடி நிறு­வ­னத்­து­டன் அறி­மு­கம் செய்து வைத்­த­னர். அத­னால் நல்ல முறை­யில் படத்­தின் வெளி­யீட்டு உரி­மையை விற்று, எனக்கு இருந்த கடனை அடைத்து, கையைச் சுட்­டுக்­கொள்­ளா­மல் குறைந்­த­பட்ச லாபத்­துக்கு விற்­றேன்," என்­கி­றார் அமலா.

இனி பெண் மையக் கதை­களில் மட்­டுமே நடிப்­பீர்­களா என்று சிலர் கேட்­கி­றார்­க­ளாம். அப்­ப­டி­யெல்­லாம் எந்­த­வொரு திட்­ட­மும் இல்லை என்­பதே அம­லா­வின் பதில்.

"'மைனா' படத்­தில் நடித்­த­போது எனக்கு 18 வயது. போதிய அனு­ப­வம் இல்லை. பிறகு, தவ­று­களில் இருந்து பாடம் கற்­றேன். எனக்கு நடிப்­புத் திறமை இருக்­கிறது என்று நான் உணர்ந்­த­போது நல்ல கதா­பாத்­தி­ரங்­கள், சவா­லான கதா­பாத்­தி­ரங்­கள் என இரண்­டுக்­கும் சம­மான முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்தே 'ஆடை' படத்தை ஒப்­புக்­கொண்­டேன்.

"அந்­தப் படம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறா­மல் போயி­ருக்­க­லாம். ஆனால், 'அமலா பால் கலைக்­காக, ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்­காக துணிந்­தி­ருக்­கி­றார்' என்று விமர்­ச­கர்­கள் எழு­தி­னார்­கள் அல்­லவா, அது­தான் எனக்­கான வெற்றி. அந்த துணி­வு­தான் பெண் மையக் கதை­கள் என்னை நோக்கி வரக் கார­ணம். பெண் மையக் கதை­யாக இருந்­தா­லும் இது­வரை செய்­யாத பாத்­தி­ரங்­கள் என்­றால் மட்­டுமே ஏற்­பேன்," என்­கி­றார் அமலா.