திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
c67c8740-efef-42de-a7fd-9709ba1253fe
-

 விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியிருந்த அதிதி சங்கர், இப்போது அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடினால் கூட போதும், அதுவே மகிழ்ச்சிதான் என்கிறார்.

தமிழ்த் திரையுலகில் சூர்யாவையும் சமந்தா வையும்தான் அதிதிக்கு ரொம்பப் பிடிக்குமாம். சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புகிறாராம். தற்போது சிவகார்த்தி கேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார் அதிதி.

 நடிகர் அஜித் திடீரென சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவு அவரது ரசிகர்களை அதிகம் யோசிக்க வைத்திருக்கிறது. தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத் தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்' என்று டுவிட்டர் வழி ரசிகர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பதிவை அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதற்காக அஜித் இவ்வாறு திடீர் அறிவுரை கூறியுள்ளார் என்று தெரியவில்லை என்றாலும், அவரது ரசிகர்கள் இந்த டுவீட்டை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 பாலா இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. சூர்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேதான் நாயகி என்று கூறப்பட்டது. ஆனால் சம்பளம், கால்ஷீட் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால் பூஜா ஒதுங்கிவிட்டாராம். இதையடுத்து இந்தி நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல். இவர் இந்தியிலும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக முந்திய பேட்டிகளில் கூறியுள்ளார் திஷா.