கிசுகிசுக்களை வரவேற்பதாகச் சொல்கிறார் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.
இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இருவரும் இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்நிலையில், ஒரு கலந்துரையாடல் நிகழ்வின்போது காதல் விவகாரம் குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தயக்கமின்றிப் பதிலளித்த அவர், பிரபலமாக இருப்பதும் சில நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்றார்.
"எந்த அளவு மக்கள் நம்மை விரும்புகிறார்களோ, அதே அளவு நமது சொந்த வாழ்க்கை பற்றியும் அறிய ஆர்வம் காட்டுவார்கள்.
"அந்த வகையில் என்னைப் பற்றியும் அறிய விரும்புகிறார்கள். இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
"ஒருவரை பற்றி எந்தவிதமான செய்திகள் வெளிவராமல் இருப்பதற்குப்பதில், 'கிசுகிசு'வாக ஏதோ ஒரு தகவல் குறித்து ரசிகர்கள் பேசுவது நல்லதுதானே," என்றார் விஜய் தேவரகொண்டா.

