'கதைத்தேர்வில் கைதேர்ந்தவர்'

'கதைத்தேர்வில் கைதேர்ந்தவர்'

3 mins read
684a25b3-6265-4dc4-9f02-23e8696d975a
அருள்நிதி -

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு 'பனி விழும் இரவு' என்ற தலைப்­பில் சொல்­லப்­பட்ட கதை இப்­போது 'டைரி' என்ற திரைப்­ப­ட­மாக உரு­வாகி உள்­ளது. நாய­க­னாக நடித்­தி­ருப்­ப­வர் அருள்நிதி.

கதைப்­படி படத்­தில் ஒரு 'டைரி'யையும் முக்­கிய கதா­பாத்­தி­ர­மாக சித்­தி­ரித்­துள்­ள­னர். அத­னால்­தான் இந்­தத் தலைப்­பை­யும் தேர்ந்­தெ­டுத்­த­ன­ராம்.

அடி­தடி, திகில், புல­னாய்வு, காதல் எனப் பல்வேறு அம்­சங்­கள் இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

"ஒரு­நாள் முக்­கி­ய­மான செய்­தி­களை நாளேடு­களில் படித்­துக்கொண்­டி­ருந்­தோம். அப்­போது மனத்­தில் உரு­வான கதை இது.

"என்ன மாதி­ரி­யான செய்தி என்­ப­தைச் சொல்ல இய­லாது. அது­தான் கதை­யின் மையக்கரு," என்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் இன்­னாசி பாண்­டி­யன்.

இவர், 'ஈரம்' பட இயக்கு­நர் அறி­வ­ழ­கன், 'கோப்ரா' பட இயக்­கு­நர் அஜய் ஞான­முத்து ஆகி­யோ­ரி­டம் உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

'ஆறாது சினம்' படத்­தில் பணி­யாற்றியபோதே இவ­ருக்­கும் அருள்­நிதிக்­கும் நட்பு மலர்ந்­துள்­ளது.

எனி­னும் பின்­னாள்­களில் அருள்­நிதியை வைத்து தாமே ஒரு படத்தை இயக்­கும் வாய்ப்பு அமை­யும் எனக் கன­வில்கூட நினைத்­த­தில்லை என்­கி­றார்.

"அவ­ரு­டனான நட்பு எனக்கு மிகப்­பெரிய பலம். எனது முதல் படத்­துக்­கான கதையை பல நடி­கர்­களி­டம் சொல்லி இருக்­கி­றேன். ஆனா­லும் அடுத்­த கட்டத்­துக்கு நகர முடி­ய­வில்லை. பின்­னர் 'கோப்ரா' பட வேலை­களில் ஈடுபட்டிருந்­த­போது அதன் ஒளிப்­பதி­வா­ளர் அர­விந்த் சிங், அருள்நிதி கதை கேட்­கத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அதற்­குத் தயாரா என்­றும் கேட்­டார். உடனே தயார் என்­றேன். அருள்­நி­தியை சந்­திப்­ப­தற்­குள் அவ­ருக்­கேற்ற மாதிரி கதை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­தேன்.

"அவ­ரைச் சந்­தித்­த­போது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கதை சொல்லி இருப்­பேன். அவ­ருக்கு கதை பிடித்­தி­ருந்­தது. தனக்குப் படத்­தில் இத்­த­னை காட்சி­கள் வேண்­டும், காதல் பாடல்­கள், சண்­டைக்­காட்சி­கள் தேவை என்­றெல்லாம் அவர் தரப்­பில் இருந்து எந்த கோரிக்­கை­யும் வராது. நல்ல கதை­யில் தாம் இருக்க வேண்­டும் என்­பது மட்­டுமே அவ­ரது எதிர்­பார்ப்பு. கதைகளைத் தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர். இப்­ப­டிப்­பட்ட நாய­கர்­களை அதி­கம் பார்க்க முடி­யாது.

"அருள் தொடர்ந்து திகில் கதை­யில் நடிக்­கி­றார் என்­பது உண்­மை­தான். ஆனால் அது­போன்ற கதை­களில் நடிக்க அவரைவிட நல்ல தேர்வு இல்லை என்­ப­து­தான் பதில். இந்­தக் கார­ணத்­தி­னால்­தான் அவ­ருக்கு என ஒரு ரசி­கர்­ கூட்­டம் உரு­வா­னது என­லாம்.

"பல­வி­த­மாக யோசிக்­கா­மல் புது இயக்­கு­நர்­களு­டைய கதையை நம்பி கள­மி­றங்­கு­வது சாதா­ர­ண­மல்ல. அதற்கு தனித்துணிவு வேண்­டும். 'முதல் படம், முதல் கதை என்று வரும் அறி­முக இயக்­கு­நர்­க­ளி­டம் ஒரு­வித பொறி இருக்­கும். அதை நான் பயன்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அவர்­க­ளை­யும் அந்­தக் கதை­க­ளை­யும் நம்பி நடிக்­க­லாம் என்று ஒரு­முறை என்­னி­டம் சொன்­னார். அவர் திட்­ட­மிட்டு தன் எல்­லை­க­ளைப் புரிந்­து­கொண்டு கதை­க­ளைத் தேர்வு செய்­வதைப் புரிந்­து­கொண்­டேன்," என்­கி­றார் இன்­னாசி.

'டைரி' படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யீடு கண்­டது. கமல், விக்­ரம், இந்தி நடி­கர் அமீர்­கான் ஆகி­யோர் இணைந்து அதை வெளி­யிட்­ட­னர். இதை தாம் சற்­றும் எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார் இன்­னாசி.

"திரை­யு­ல­கில் பெரி­தா­கச் சாதித்­த­வர்­கள் இந்த அள­வுக்கு எளி­மை­யாக நடந்துகொள்­வது அவர்­களு­டைய பெருந்­தன்மை என்­பேன். இந்த மகிழ்ச்சி­யில் இருந்து மீள்­வ­தற்­குள், 'டைரி' படத்தை ரெட் ஜயன்ட் நிறு­வ­னம் வெளி­யிட முன்வந்­துள்­ளது. இப்போதே பாதி வெற்றி கிடைத்­து­விட்­ட­தாக உணர்கிறேன்," என்கிறார் அருள்நிதி.