'கைதி' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று தொடர்ந்து கேட்டு வரும் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. இரண்டாம் பாகத்தில் தன் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கார்த்தி கூறுகிறார்.
"கமல் நடித்த 'விக்ரம்' படத்தில் நானும் நடிப்பதாக இருந்தது. டெல்லி கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் நடிக்குமாறு லோகேஷ் கனகராஜ் கேட்டார். ஆனால் அச்சமயம் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.
"நீண்ட தலைமுடியை எடுத்து விட்டு நடிக்க முடியாது என்பதால் அப்படத்தில் பின்னணிக்குரல் மட்டுமே கொடுக்க முடிந்தது. இல்லையென்றால் சூர்யா நடித்த ரோலக்ஸ் பாத்திரத்தைப் போன்று நானும் 'விக்ரம்' படத்தில் நடித்து இருப்பேன்.
"அடுத்த ஆண்டு 'கைதி-2' படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதிலும்கூட 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறுகிறது. அதனால் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கப் போகிறேன்," என்கிறார் கார்த்தி.

