தமிழில் நல்ல வாய்ப்புகள் அமைந்தபோது நடிக்க முடியாமல் போனதாகச் சொல்கிறார் இந்தி நடிகை ஷ்ரத்தா தாஸ்.
இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் ஜோடியாக 'அர்த்தம்' என்ற படத்தில் சத்தமின்றி நடித்து முடித்துள்ளார்.
மகேந்திரன் வளர்ந்து வரும் நாயகன் என்றபோதி லும், ஏராளமான படங்களில் நாயகியாக நடித்துள்ள ஷ்ரத்தா அவருடன் இணைந்து நடிக்க முன்வந்துள்ளார்.
"முதல் முறையாக இப்படத்தில் உளவியல் மருத்துவராக நடித்திருக்கிறேன். நான் உண்மையாக உளவியல் படித்திருப்பதால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது.
"என்னைப் பொறுத்தவரை படத்தின் கதை என்ன, எனது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்றுதான் பார்ப்பேன். உடன் நடிப்பவர்கள் குறித்து தெரிந்துகொண்டு படங்களை ஒப்புக் கொள்வதில்லை. அப்படித்தான் இந்தப் படத்திலும் நடிக்கச் சம்மதித்தேன்," என்கிறார் ஷ்ரத்தா.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி நேற்று வெளியானது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அதனைச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் சுவரொட்டி சற்றே வயதான தோற்றத்துடன் மிடுப்புடன் காணப்படுகிறார் ரஜினி. அவரது வயதுக்கு ஏற்ற ஒப்பனையும் கதா பாத்திரமும் அமைந்துள்ள தாக ரசிகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும்
ரஜினியின் 169வது படமாக உருவாகிறது 'ஜெயிலர்'. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன்,
ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவில்லை என்றாலும் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியானது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
'வெந்து தணிந்தது காடு' பட வேலைகள் முடிவடைந்த நிலையில், 'பத்து தல' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. 'வெந்து தணிந்தது காடு' படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரை காண உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர் கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்படத்தில், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் சிம்பு குண்டர் கும்பலைச் சேர்ந்தவராக நடிக்கிறார். அது தொடர்பான சிறு காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிற உடை அணிந்து காணப்படுகிறார் சிம்பு. அத்துடன், அவரது மடியில் ஒரு சிறுமி அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் நடிகை அனு சித்தாரா நின்று கொண்டிருக்கிறார். சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் உள்ளதால், இந்தக் காணொளி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அட்லீ இயக்க, ஷாருக் கான் இரட்டை வேடங் களில் நடித்து வரும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு சென்னை யில் நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் ஷாருக். தந்தை கதாபாத்திரத்துக்கு தீபிகா படுகோனும் மகனுக்கு நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் ஷாருக்கும் இரு நாயகிகளும் பங்கேற்க உள்ளனர்.

