'குறைகள் இருப்பின் மன்னியுங்கள்'

'குறைகள் இருப்பின் மன்னியுங்கள்'

1 mins read

தாம் இயக்­கி­யுள்ள 'குருதி ஆட்­டம்' படத்­தில் ஏதே­னும் குறை­கள் இருந்­தால், அதற்­காக தம்மை மன்­னிக்­கு­மாறு ரசி­கர்­க­ளி­டம் வேண்டு­கோள் விடுத்­துள்­ளார் இயக்­கு­நர் ஸ்ரீ கணேஷ்.

'8 தோட்­டாக்­கள்' படத்­தின் மூலம் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்த இவர், அதர்­வாவை வைத்து 'குருதி ஆட்­டம்' படத்தை இயக்­கி­உள்­ளார்.

இந்­தப் படம் '8 தோட்­டாக்­கள்' படம் போல் சிறப்­பாக இல்லை என சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து, கவ­ன­மா­கச் செயல்­பட்டு, ரசி­கர்­க­ளுக்கு மன­நி­றைவு ஏற்­படும் வகை­யில் தனது அடுத்த படைப்பை உரு­வாக்க இருப்­ப­தாக ஸ்ரீ கணேஷ் கூறி­யுள்­ளார்.

மேலும் செப்­டம்­பர் 2ஆம் தேதி 'குருதி ஆட்­டம்' படம் ஓடிடி தளத்­தில் வெளி­யீடு காண உள்­ளது என்­றும் திரை­ய­ரங்­கில் பார்க்க முடி­யா­த­வர்­கள் ஓடிடி தளத்­தில் பார்த்து ரசிக்­க­லாம் என்­றும் ஸ்ரீ கணேஷ் அண்­மைய பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.