19 வயது இளையராக மாறி அசத்திய சிம்பு

19 வயது இளையராக மாறி அசத்திய சிம்பு

3 mins read
a56117fe-7e58-4864-8509-aa358eca4542
-

சிம்­புவை வைத்து தாம் இயக்­கும் படத்­துக்கு முத­லில் 'நதி­களில் நீரா­டும் சூரியன்' என்­ப­து­தான் இயக்­கு­நர் கௌதம் மேனன் தேர்வு செய்து வைத்­தி­ருந்த தலைப்பு. ஆனால் பிறகு அது 'வெந்து தணிந்­தது காடு' என்று மாற்­றப்­பட்­டது.

மும்பை, நிழல் உல­கம், குண்­டர் கும்­பல் உள்­ளிட்ட விஷ­யங்­களை உள்­ள­டக்­கிய படைப்­பாக இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது.

எழுத்­தா­ளர் ஜெய­மோ­கன் மூன்றே நாள்­களில் சுமார் நூறு பக்­கங்­க­ளுக்கு திரைக்­கதை எழுதிக்கொடுத்­துள்­ளா­ராம். அதைப் படித்­துப்பார்த்த சிம்­பு­வும் தயா­ரிப்­பா­ளர் ஐசரி கணே­ஷும் மன­நி­றை­வு­டன் சம்­ம­திக்க, பட வேலை­கள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இப்­போது திரை­காண்­கிறது 'வெந்து தணிந்­தது காடு'.

"சிம்­பு­வி­டம் உள்ள சிறப்­பம்­சம் எதற்­கும் வளைந்துகொடுக்­கும் தன்மை உள்­ள­வர். ஒரு படைப்­பா­ளி­யால் அவரை வைத்து எது­வும் செய்ய முடி­யும். சிம்பு ஒரு படத்­தில் இருந்­தால் எது­வும் சாத்­தி­ய­மா­கும் என்று உறு­தி­யா­கச் சொல்­ல­லாம்.

"இந்தி நடி­கர் அமீர்­கான் திடீ­ரென ஒரு படத்­தில் 19 வயது இளை­ய­ராக திரை­யில் தோன்­றி­னார். சிம்­பு­வும்­கூட அதே­போன்று செய்­துள்­ளார். அவர் இன்­னும் இளை­யர்­தான்.

"19 வயது முத்­து­வீ­ரன் கதா­பாத்­தி­ரத்தை அவ­ரி­டம் விவ­ரித்­த­தும் உடனே கேர­ளா­வுக்­குப் புறப்­பட்­டு­விட்­டார். அங்­கி­ருந்து திரும்பி வந்­த­போது ஆளே மாறிப்­போய்­விட்டார். சிம்­பு­வுக்­குப் பதி­லாக முத்­து­வீ­ரன்­தான் என் கண்­க­ளுக்­குத் தெரிந்­தான்.

"அவ­ரது இள­வ­யது தோற்­றத்­தை­யும் நடிப்­பை­யும் படக்­கு­ழு­வில் இருந்த ஒவ்­வொ­ரு­வ­ரும் வெகு­வாக ரசித்­தோம். எத்­த­கைய காட்­சி­யாக இருந்­தா­லும் அதை நன்கு உள்­வாங்­கிக்­கொண்டு ஒரே மூச்­சில் பேசி முடிப்­பது அவ­ருக்கு கைவந்த கலை," என்று பட நாய­க­னைப் பாராட்­டித் தீர்க்­கி­றார் கௌதம் மேனன்.

ஜெய­மோ­கன் எழு­திக்கொடுத்த திரைக்­கதை­யில் காத­லுக்கு இடம் கொடுக்­க­வில்­லை­யாம். அத­னால் தாமே காத­லுக்­கான பகு­தியை சேர்த்­துக் கொண்­ட­தா­க­வும் இது­வரை தமது படங்­களில் பார்த்­தி­ராத காதலை இதில் காண முடி­யும் என்­றும் கௌதம் மேனன் உறுதி அளிக்­கி­றார்.

இந்­தப் படத்­தில் சிம்­பு­வுக்கு ஜோடி­யாக நடிப்­ப­வர் சித்தி இத்­னானி. பாவை என்ற கதா­பாத்­தி­ரத்­தில் மிக இயல்­பாக நடித்­துள்­ள­தா­கப் படக்­கு­ழு­வி­னர் பாராட்­டு­கின்­ற­னர்.

"சித்தி இத்­னா­னியைச் சந்­திப்­ப­தற்கு முன்பு வேறு சில நடி­கை­களை பரி­சீ­லித்­தோம். யாரும் பொருத்­த­மாக இல்லை. அத­னால் வேறு வழி­யின்றி ஒரு நாய­கியை ஒப்­பந்­தம் செய்து, ஒரு படப்­பி­டிப்­பை­யும்­கூட நடத்­தி­விட்­டோம்.

"இந்­நி­லை­யில் அவர் நேரில் வந்து சந்­தித்­தார். அப்­போது காலை 11 மணி­யாகி இருந்­தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்­குள் படப்­பி­டிப்­புத் தளத்­தில் இருந்­தார் சித்தி.

"மும்­பை­யைச் சேர்ந்­த­வர் என்றாலும் நன்­றா­கத் தமிழ் பேசு­கிறார். வச­னங்­க­ளின் முக்­கி­யத்­து­வத்­தைப் புரிந்துகொண்டு நடிப்பதைப் பாராட்ட வேண்­டும்," என்­கி­றார் கௌதம் மேனன்.

இது என்ன மாதி­ரி­யான கதை?

"இது குண்­டர் கும்­ப­லைச் சேர்ந்த ஓர் இளை­ஞ­னின் கதை. அவன் எதற்­காக அந்­தக் குழு­வில் இணை­கி­றான், அதன் பின்­னணி என்ன, அவ­னது வாழ்க்கை எங்கு, எப்­ப­டித் தொடங்­கி­யது என்­பதை விறு­வி­றுப்­பாக காட்சிப்­ப­டுத்தி உள்­ளோம்.

"நாம் அனை­வ­ருமே கிடைத்த வாழ்க்­கையை வாழ்­கி­றோம். அதில் இப்­ப­டிப்­பட்ட ஒரு வாழ்க்கை­யும் இருக்­கிறது என்பது வெளியே தெரிய வேண்­டும். அடி­தடி அதி­கம் என்­றா­லும் வன்­மு­றையை மிகைப்­ப­டுத்­தா­மல்­தான் காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ளோம்.

"ஒரு கதா­நா­ய­கன் என்­றால் பத்து பேரை அடிக்­க­லாம், அவ­னால் எல்­லாம் முடி­யும் என்று ரசி­கர்­கள் மன­தில் பதிய வைத்­துள்­ளோம். மக்­களும் அதை மன­தில் நினைத்­த­ப­டித்­தான் படம் பார்க்க வரு­கி­றார்­கள். கமல் படம் என்­றால் திரை­யில் எது­வும் நடக்­கக்­கூ­டும் என நம்­பு­கின்­ற­னர்.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில், 'நாளைக்கு நாம் உயி­ரோடு இருப்­போமா என்று தெரி­ய­வில்லை, இதி­லி­ருந்து வெளியே போய்­வி­ட­லாமா?' என்று ஒரு­வன் கேட்­பான். அதற்கு மற்­றொ­ரு­வன், 'பெரிய விஷ­யம் ஏதும் செய்­ய­வில்லை என்­றால் போய்­வி­ட­லாம். ஒரு­வேளை ஏதா­வது பெரி­தாக சாதித்­தால், இங்கே இருப்­ப­து­தான் 'பாது­காப்பு' என்­பான். இது­தான் இந்­தப் படத்­தின் கதைச்­சு­ருக்­கம்," என்கிறார் கௌதம் மேனன்.