அண்மையில் வெளியீடு கண்ட 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனனின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
கதைப்படி, ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் தனுஷின் தோழியாக நடித்துள்ளார் நித்யா.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் தனுஷ் நடிப்புக்கு இணையாக நித்யாவும் பேசப்படுகிறார். பெரும்பாலானோர் அவரை ஷோபனா என்றே குறிப்பிடுகின்றனர். இதனால் தாம் நெகிழ்ந்து போயிருப்பதாக நித்யா கூறியுள்ளார்.
"ஷோபனா மீதான அன்புக்கு நன்றி. எல்லோராலும் பேசப்படும் இப்படத்தைப் பாருங்கள்," என நன்றி தெரிவித்துள்ளார் நித்யா.
தமிழில் ஏன் தொடர்ந்து நடிப்பதில்லை என்ற கேள்விக்கும் அவரது பதில் கிடைத்துள்ளது.
"எப்போதாவது நடித்தாலும் எப்போதும் என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தால் தயக்கமின்றி நடிப்பேன்," என்கிறார் நித்யா.

