சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்படிப்பு தொடங்கி உள்ளது.
தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. எனினும், வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படம் முழுமையாக முடிவடைய சற்று தாமதமாவதால், கிடைத்த சிறிய இடைவெளியில் சிறுத்தை சிவாவுடன் முதன்முறையாக கூட்டணியமைத்துள்ளார் சூர்யா.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா, 'படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமன்னா இந்தியில் நடித்துள்ள 'பப்ளிக் பவுன்சர்' படம் வரும் செப் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, விளம்பர நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார் தமன்னா.

