மலையாள திரையுலகில் சில எல்லைகளுக்கு உட்பட்டுத்தான் படங்களைத் தயாரிப்பதாகச் சொல்கிறார் நடிகை அனுபமா. தேவையற்ற பிரம்மாண்டம், விளம்பரம் என்றெல்லாம் பணத்தை செலவிடுவதில்லை என்று பாராட்டுகிறார்.
"மலையாளத்தில் அற்புதமான கதைகள் படங்களாக வந்துள்ளன. தெலுங்கில் பிரம்மாண்டமாகப் படங்களை எடுத்தாலும் அவற்றில் நல்ல கதையம்சம் இருக்கிறது.
"இப்போது ஓடிடி தளங்கள் வந்தபிறகு, எந்த மொழிப் படத்தையும் மறுபதிப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ரசிகர்கள் அனைத்துப் படங்களையும் உடனுக்குடன் பார்க்க முடிகிறது. எனக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என்ற வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை," என்கிறார் அனுபமா.

