'இது இரண்டு நாள் கதை'

'இது இரண்டு நாள் கதை'

3 mins read
eb4aabd3-3e4d-4853-b12f-770c58ccd5af
-

'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' படத்­தில் தம்பி அருள்­நி­தியை வைத்து இயக்­கிய மு.மாறன், இப்­போது அண்ணன் உதயநிதியை வைத்து உருவாக்கி வரும் படம் 'கண்ணை நம்­பாதே'.

முதல் படம் கொலையை மைய­மாக வைத்து நக­ரும் கதைக்­க­ளத்­தைக் கொண்­டது எனில், இரண்­டா­வது படம் இரண்டே நாள்­களில் நடக்­கும் கதையை வைத்து உரு­வாகி உள்­ளது.

"கதா­நா­ய­க­னுக்கு திடீர் பிரச்­சி­னை­கள் உரு­வா­கிறது. யாரெல்­லாம் அப்பிரச்சினைகளு­டன் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னர், அவற்­றில் இருந்து நாயகன் எப்­ப­டித் தப்­பிக்­கிறான் என்­கிற வழக்­க­மான கதை­யைப் போலத்­தான் தோன்­றும். ஆனால், எனது திரைக்­கதை அடுத்து என்ன நடக்­கப் போகிறதோ எனும் கேள்­வியை எழுப்பி, பர­ப­ரப்­பைக் கூட்­டும்.

"கதைப்­படி, கதாநா­ய­கன் கணினி நிறு­வ­னத்­தில் வேலை பார்ப்­ப­வன். சில பிரச்­சி­னை­கள் அவ­னைத் தேடி வரு­கிறது எனில் சில­வற்றை அவனே தேடிச் செல்­வான். இந்­தக் கதைக்­க­ளத்­தில் நல்­ல­வர்­கள், கெட்­ட­வர்­கள் என்­றெல்­லாம் யாரும் இல்லை. சூழ்­நிலை அவர்­களை எவ்­வா­றெல்­லாம் மாற்­று­கிறது என்­பதைச் சொல்லி இருக்­கி­றோம். இந்த விளை­யாட்டு ரசிக்­கும்­ப­டி­யா­க­வும் திகி­லா­க­வும் இருக்­கும்," என்­கிறார் இயக்­கு­நர் மு.மாறன்.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு நடிகை பூமிகா முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ள­தா­க­வும் அவ­ரது நடிப்பு ரசி­கர்­க­ளால் மீண்­டும் பேசப்­படும் என்­றும் உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார்.

அவரை ஒப்­பந்­தம் செய்­த­துமே 'ரோஜாக்­கூட்­டம்' பட நாய­கன் ஸ்ரீகாந்­தின் நினைவு வந்­த­தாம். அவ­ரை­யும் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். பிர­சன்­னா­வும் மன­தில் பதி­யும் பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். இப்­ப­டிப் பலர் இணைந்­த­தும் பெரிய பட­மாக மாறி­விட்­டது.

"உத­ய­நி­தியை வைத்து என்­னு­டைய முதல் படத்தை இயக்­கிய வேளை­யில் ஒரு நாள் படப்­பி­டிப்­பின்­போது, 'அண்­ணனுக்கு (உத­ய­நிதி) ஒரு கதை வைத்­தி­ருக்­கி­றேன்' என்று அருள்­நிதி­யி­டம் கூறி இருந்­தேன். அவர் அதை மறந்­தி­ருப்­பார் என்­றும் நினைத்­தி­ரு­ந்­தேன்.

ஆனால், அவர் மறக்­கா­மல் உத­ய­நிதி சாரி­டம் தெரி­வித்­துள்­ளார். அவ­ருக்­காக நான் தயார் செய்த கதை­யில் காதல், அர­சி­யல் என இரண்­டும் இருக்­கும். அப்­போது அவர் அர­சி­ய­லுக்கு வரத் தயா­ராக இருந்­தார். அத­னால் அர­சி­யல் கலந்த படத்­தில் நடிக்­கத் தயங்­கி­னார். பிறகு 'இர­வுக்கு ஆயி­ரம் கண்­கள்' போன்ற கதை­யில் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னார்.

"அது­போன்ற கதை­யும் கைவ­சம் இருந்­தது. அதை­யும் உடனே விவ­ரித்­தேன். அது அவ­ருக்குப் பிடித்­துப்­போய் தொடங்­கி­ய­து­தான் 'கண்ணை நம்­பாதே' படம்," என்­கி­றார் மு.மாறன்.

நடிகை ஆத்­மிகாதான் இந்­தப் படத்­தின் கதா­நா­யகி. தனது கதைக்கு நயன்­தாரா, சமந்தா, காஜல் போன்ற பெரிய நாய­கி­கள் தேவைப்­ப­ட­வில்லை என்­ப­வர், தனது பட நாய­கிக்கு அண்டை வீட்­டுப் பெண்­ணைப் போன்ற ஒரு தோற்­றம் இருந்­தால் மட்­டும் போதும் என்று நினைத்­த­தா­கச்சொல்­கி­றார்.

"ஆத்­மி­கா­வுக்கு அத்­த­கைய தோற­றம் உள்­ளது. 'மீசைய முறுக்கு' படத்­தில் அவர் வெளிப்­ப­டுத்­திய நடிப்பு பிடித்­தி­ருந்­தது. இந்­தப் படத்­தில் கார் விற்­ப­னை­ய­கத்­தில் வேலை பார்க்­கும் பெண்­ணாக அவர் நடித்­துள்­ளார். அவ­ருக்­கும் உத­ய­நி­திக்­கு­மான பகுதி மிக அழ­கா­கக் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரு­வ­ரது உடல்­மொ­ழி­யும் கச்­சி­த­மா­கப் பொருந்­தின.

"ஆத்­மி­கா­வைப் பொறுத்­த­வரை எதை­யும் சொன்ன உட­னேயே புரிந்து­கொள்­வார். இயல்­பாக நடிக்­கும் அதே வேளை­யில் தனக்­கான காட்சி­களை மெரு­கேற்­று­வ­தில் கெட்­டிக்­கா­ரர்," என்கிறார் மாறன்.

சரி, ஆத்மிகா என்ன சொல்கிறார்?

"இயக்­கு­நர் மாறன் கதை சொல்­லிக் கொண்­டி­ருக்­கும்­போதே இப்­படத்­தில் நடிக்க வேண்­டும் என முடிவு செய்­து­விட்­டா­ராம்.

"உத­ய­நிதி நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்­கி­றார். அத­னால் இந்­தப் படத்­தில் எனக்கு எந்­த­வித தயக்­க­மும் இல்லை. இது தர­மான படைப்பு," என்­கி­றார் ஆத்­மிகா.

அண்­மை­யில் திரை­யு­ல­கில் வாரி­சு­க­ளின் ஆதிக்­கம் குறித்து மறை­முகமாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார் ஆத்­மிகா. ஆனால் எந்­த­வித உள்­நோக்­கத்­து­ட­னும் தாம் அவ்­வாறு பதி­வி­ட­வில்லை என இப்­போது விளக்­கம் அளித்­துள்­ளார்.

"இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகிலும் சின்னத்திரையிலும் நடிப்பதற்கு போதுமான வாய்ப்பு இல்லை என்று யாரும் புலம்பவோ குறைகூறவோ தேவையில்லை.

திரைப்படம், இணையத் தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன," என்கிறார் ஆத்மிகா.

, :   