திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது என்றும் பொருளியல் ரீதியாக வேறு
ஒருவரைச் சார்ந்திருப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் நடிகை சதா ('அந்நியன்' பட நாயகி) கூறியுள்ளார்.
'வயதாகிறது, திருமணம் செய்துகொள்' என்று சிலர் வற்புறுத்துகிறார்கள். திருமணம், குழந்தைகள் பெற்றுக்கொள்வது ஆகிய எனது தனிப்பட்ட வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்புகிறார் சதா.
அண்மைக் காலங்களில் திருமணம் செய்துகொள்ளும் பத்து ஜோடிகளில் சரிபாதி பேர் கூட திருமணத்துக்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்வதில்லை. வேறு ஒருவர் என்னை மகிழ்ச்சிபடுத்தத் தேவையில்லை. எனக்காக நானே உழைப்பேன். விருந்து, கேளிக்கை நிகழ்வு களில் பங்கேற்பதில்லை. திரு மணம் என்ற பெயரில் இன் னொருவரைச் சார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை," என்கிறார் சதா.
அலியா பட் நடித்த 'பிரம்மாஸ்திரா' படத்தைப் புறக்கணிக்கும்படி ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்றனர். அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேவையற்ற கருத்துகளை தெரிவித்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை அலியா பட். இவரது நடிப்பில் உருவாகி உள்ள புதுப்
படம் 'பிரம்மாஸ்திரா'. இப்பட வெளியீட்டுக்கு முன்னர் இலவச விளம்பரம் தேடிக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டு, "என்னைப் பிடிக்கவில்லை எனில் என்னுடைய படத்தைப் பார்க்க வேண்டாம்," என ஒரு பேட்டியில் அவர் குறிப்பிடப்போக, வெடித்தது பிரச்சினை. இது தொடர்பான காணொளிப்பதிவை பகிர்ந்துவரும் இணையவாசிகள் பலர், 'பிரம்மாஸ்திரா' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் அண்மையில் வெளியீடு கண்ட அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தைப் போல் 'பிரம்மாஸ்திரா'வுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.
நடிகர் விஜயகாந்தை அண்மையில் நேரில் சந்தித்துள்ளார் நடிகர் கார்த்தி. அப்போது அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்ட விஜயகாந்த், வாஞ்சையுடன் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு, நலம் விசாரித்துள்ளார். இதில் தாம் நெகிழ்ந்து போனதாகவும் விஜயகாந்த் தன்னை அடையாளம் கண்டுகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்தி. "தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு கடமைப்பட் டுள்ளது. அச்சங்கத்தின் உறுப்பினர் என்பதாலும் அன்பு மிகுதியாலும் அவரைப் பார்க்கச் சென்றேன்," என்கிறார் கார்த்தி.
யூடியூப் தளத்தில் நடிகை ஓவியா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் பயில் வான் ரங்கநாதன். ஏற்கெனவே அவர் நடிகைகள் குறித்து அவ தூறாகப் பேசுவதாகப் புகார் உள்ளது. இந்நிலையில் ஓவியா போதைப் பழக்கத்துக்கு அடிமை யாகிவிட்டார் என்றும் பணத்துக் காக நிறைய ஆண்களுடன் அவர் நட்பு பாராட்டுவதாகவும் கூறி உள்ளார் பயில்வான் ரங்க நாதன். இதையடுத்து, அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும் என ஓவியா ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

