'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த துஷாரா, மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் நடித்துள்ளார்.
இது தாம் மிகவும் நேசித்து நடித்த படம் என்று கூறுகிறார் அந்த இளம் நாயகி.
"சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தைக் கொடுத்து சினிமாவில் பாதை அமைத்துக் கொடுத்தவர் ரஞ்சித் சார்.
மீண்டும் இந்தப் புதுப்படத்தில் என்னை 'ரெனே'வாக வாழ வைத்திருக்கிறார்.
இந்தப் படத்துக்குப் பின் முன்னணி நட்சத்திரமாக உயர்வேன்," என்கிறார் துஷாரா.
தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் 'டிப்டாப்' வில்லனாக வந்து மிரட்டியவர் அமிதாஷ்.
அதன்பிறகு 'வானம் கொட்டட்டும்', 'குட்டி ஸ்டோரி', 'தள்ளிப் போகாதே' எனப் பல படங்களில் பலவித கதாபாத்தி ரங்களில் வந்து கவனம் ஈர்த்தார்.
தற்போது இயக்குநர் ராமின் உதவியாளர் சி.அரவிந்த் ராஜ் எழுதி, இயக்க, கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பரம்பொருள்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சிலைக்கடத்தல் குற்றங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சரத்குமாரும் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசியும் நடித்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிக்கும் 31வது படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் நாயகனுக்கு இணையாக நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கீர்த்தி.
இதற்கிடையே, இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடிக்கிறார்.
'ஜெ.ஆர் 30' என்று தற்காலிக மாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
நட்ராஜ், வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில்
பூசையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் சிவ கார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளாராம் பிரியங்கா.

