'அன்புத் தொல்லை கொடுத்தார் விக்ரம்'

'அன்புத் தொல்லை கொடுத்தார் விக்ரம்'

2 mins read
8973d7eb-b10b-4a47-b846-1eed40acdc6b
-

'கோப்ரா' படப்­பி­டிப்­பின்­போது பட நாய­கன் விக்­ரம் அன்­புத்­தொல்லை கொடுத்­த­தாக பட நாய­கி­கள் மூவ­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

அஜய் ஞான­முத்து இயக்­கத்­தில் விக்­ரம் நடித்­துள்ள 'கோப்ரா' படம் வரும் 31ஆம் தேதி வெளி­யீடு காண உள்­ளது.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் நடை­பெற்ற இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்பு வெளி­யீட்டு விழா சென்­னை­யில் சிறப்­பாக நடந்­தேறி­யது. அதில் பட நாயகி­கள் ஸ்ரீநிதி, மிரு­ணா­ளினி ரவி, மீனாட்சி கோவிந்­த­ராஜன் ஆகிய மூவ­ரும் கலந்து­கொண்­ட­னர். அப்­போது அந்­நிகழ்ச்சி­யில் பேசிய மிரு­ணா­ளினி ரவி, இரவு பகல் பாரா­மல் இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு நடை­பெற்­றது என்­றும் விக்­ர­மின் உழைப்­பும் நடிப்­பும் படக்­கு­ழு­வி­னரை அசர வைத்­தது என்­றும் குறிப்­பிட்­டார்.

மேலும், விக்­ரம் சோர்­வின்றி மிகுந்த அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் பணி­யாற்­றி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"பல நாள்­க­ளுக்கு இரவு முழு­வ­தும் படப்­பி­டிப்பு நடை­பெ­றும். அப்­போ­தெல்­லாம் நான், ஸ்ரீநிதி, மீனாட்சி ஆகிய மூவ­ரும் களைப்பு மிகுதி­யில் நாற்­கா­லி­யில் அமர்ந்­த­ப­டியே தூங்கி இருக்கி­றோம். ஆனால், விக்­ரம் அதைச் செய்ய மாட்­டார்.

"நாங்­கள் நடிக்க வேண்­டிய காட்சி பட­மாக்­கப்­பட இருந்­தால் அவரே தேடி வந்து, எங்­க­ளைத் தூக்­கத்­தில் இருந்து எழுப்பி அழைத்­துச்­செல்­வார். மிகப்­பெ­ரிய கதா­நா­யன் இவ்­வாறு எளி­மை­யாக நடந்­து­கொண்­டது வியப்பை அளித்­தது," என்­றார் மிரு­ணா­ளினி ரவி.

சில சம­யங்­களில் படப்­பி­டிப்­பில் தூங்கு­ப­வர்­களை சில நொடி­க­ளுக்கு காணொளி­யா­கப் பதிவு செய்து, பிறகு அவர்­க­ளுக்கு அதை கைபே­சி­யில் காண்­பித்து கிண்­டல் செய்­வா­ராம் விக்­ரம். அது­போன்ற தரு­ணங்­களில் ஒரு இளை­ய­ரைப் போல அவர் நடந்­து­கொள்­வ­தைப் பார்க்­கும்­போது எல்­லோ­ருக்­குமே உற்­சா­கம் தொற்­றிக்­கொள்­ளும் என்­கி­றார்­கள் 'கோப்ரா' படக்­கு­ழு­வில் பணி­யாற்­றி­ய­வர்­கள்.

"ஒரு­சி­லர் தூங்­கிக் கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென முகத்­தில் தண்­ணீர் தெளித்து எழுப்­பி­வி­டு­வார். அல­றிப்­பி­டித்து கண்­வி­ழித்­துப் பார்த்­தால் நமக்கு எதிரே நின்று சிரித்­துக்­கொண்­டி­ருப்­பார்.

"அதே சம­யம் படக்­கு­ழு­வில் உள்ள அனை­வ­ரி­ட­மும் அன்பு பாராட்டி, உரிய மரி­யா­தை­யைக் கொடுக்­கும் உயர்ந்த பண்பு விக்­ர­மி­டம் உள்­ளது. வேலை பார்க்­கும் ஆர்­வத்­தில் சாப்­பி­டக்­கூட மறந்­து­வி­டு­வோம்.

"அப்­போ­தெல்­லாம் எனக்­கும் ஸ்ரீநிதி, மீனாட்­சிக்­கும் அவரே உண­வுத்­தட்டை கையில் ஏந்தி வந்து உடனே சாப்­பி­டச் சொல்­வார்.

"அனை­வ­ரி­டத்தி லும் இது­போன்ற அன்­பை­யும் பண்­பை­யும் பார்க்க இய­லாது. இந்த அன்­புத்­தொல்லை நம்­மை­யும் அன்­பா­ன­வர்­க­ளாக மாற்­றி­வி­டு­கிறது," என்­கி­றார் ஸ்ரீநிதி ஷெட்டி.

நிகழ்ச்­சி­யில் பேசிய விக்­ரம், ரசி­கர்­கள் தன் மீது காட்­டும் அன்பை அள­விட முடி­யாது என்­றார்.