விடுமுறையில் சாகசம் செய்து மகிழும் பிரியா

விடுமுறையில் சாகசம் செய்து மகிழும் பிரியா

1 mins read
19150e38-cb18-4364-be89-6d3a6996e5bd
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் பொழுதைக் கழித்த பிரியா. -

ஐரோப்­பா­வுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்ட நடிகை பிரியா பவானி சங்­கர், சுவிட்­சர்­லாந்­தில் தங்­கி­யி­ருந்த நாள்­களை வாழ்­நா­ளில் மறக்­கவே இய­லாது என்­கி­றார்.

இந்­தப் பய­ணத்­தில் அவ­ரது நண்­ப­ரும் உடன் சென்­றுள்­ளார்.

சுவிட்­சர்­லாந்­தில் 'ஸ்கை டைவிங்' எனப்­படும் சாகச நிகழ்­வில் பங்­கேற்­றா­ராம் பிரியா.

விண்­ணில் அவர் பறக்­கும்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை அவர் சமூக ஊட­கங்­களில் வெளி­யிட, அவற்­றைக் கண்ட ரசி­கர்­கள் அவ­ரது துணிச்­ச­லை­யும் அழ­கை­யும் பாராட்டி உள்­ள­னர்.

தற்­போது 'இந்­தி­யன் 2' உள்­பட ஆறு படங்­களில் நாய­கி­யாக நடித்து வரு­கி­றார் பிரியா.

அவை தவிர மேலும் ஆறு புதிய படங்­க­ளுக்கு அவர் கால்­ஷீட் ஒதுக்கி உள்­ள­தா­கத் தக­வல்.

அத­னால், இடை­வெளி இன்றி, ஓய்வு பாரா­மல் படப்­பி­டிப்­பு­களில் பங்­கேற்­ற­தால் சோர்­வ­டைந்து விட்­ட­தா­க­வும் அந்த மன­நி­லை­யில் இருந்து விடு­பட வேண்­டும் என்­பதற்­கா­கவே அவர் சில நாள்­கள் விடு­முறை எடுத்­துக் கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.