மக்கள் மனம் கவர்ந்த பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் 70 ஆண்டு திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக சென்னையில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் ஒய் ஜி மகேந்திரன் செய்திருந்தார்.
பழம்பெரும் நடிகைகள் பாரதி, சச்சு, கே.ஆர்.விஜயா, காஞ்சனா, 'வெண்ணிற ஆடை' நிர்மலா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், பின்னணிப் பாடகர்கள் சித்ரா, உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பி.சுசீலாவின் இனிய பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வில் சுசீலாவுக்கு 'இசை அரசி' என்ற பட்டத்தை வழங்கினார் வைரமுத்து. மேலும், ஒரு பாராட்டுக் கவிதையும் வாசித்தார். நடிகை கே.ஆர். விஜயா, சுசீலாவுக்குக் கிரீடம் சூட்டி கௌரவித்தார்.

