ஏழாண்டுகளுக்குப் பிறகு மோதும் அஜித், விஜய்

ஏழாண்டுகளுக்குப் பிறகு மோதும் அஜித், விஜய்

1 mins read
b5665686-929e-4042-a6db-24f1b6545fd0
நடிகர்கள் விஜய், அஜித். -

அஜித், விஜய் படங்­கள் ஒரே சம­யத்­தில் வெளி­யாகி நீண்ட காலம் ஆகி­விட்­டது.

இரு­வ­ரும் இணைந்து நடிக்க வேண்­டும் என சினிமா ரசி­கர்­கள் விரும்­பி­னா­லும் இன்­னொரு பக்­கம் இரு­வ­ரது பட­மும் நேருக்கு நேர் மோத வேண்­டும் என்ற ஆவ­லும் எதிர்­பார்ப்­பும் இரு­வ­ரது ரசி­கர்­களி­டம் உள்­ளது.

இந்­நி­லை­யில் அடுத்த ஆண்டு பொங்­கல் பண்­டி­கை­யின்­போது ரசி­கர்­க­ளின் இந்த விருப்­பம் நிறை­வேற வாய்ப்­புள்­ளது.

நடி­கர் விஜய் தற்­போது தெலுங்கு இயக்­கு­நர் வம்சி இயக்­கத்­தில் 'வாரிசு' படத்­தில் நடிக்­கிறார். இப்படத்தை 'தில்' ராஜு தயா­ரிக்கி­றார்.

விஜய்க்கு ஜோடி­யாக நடிக்க ராஷ்­மிகா மந்­தனா நடிக்­கி­றார். இப்­ப­டம் அடுத்த ஆண்டு பொங்­க­லுக்கு வெளி­யா­கும் என தொடக்­கத்­தி­லேயே அறி­வித்­து­விட்­ட­னர்.

இதே­போல், 'வலிமை' படத்­திற்குப் பிறகு எச்.வினோத் இயக்­கத்­தில் நடி­கர் அஜித் தனது 61வது ப­டத்­தில் நடித்து வரு­கி­றார். போனி கபூர் தயா­ரிக்­கும் இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­கிறது. 60 விழுக்­காடு படப்­பி­டிப்பு முடிந்­து­விட்­டதை அடுத்து, சண்­டைக் காட்­சி­க­ளைப் பட­மாக்கி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், அஜித், விஜய் ஆகிய இரு­வ­ரின் புதுப்­ப­டங்­களும் நேர­டி­யாக மோதும் சூழல் உரு­வாகி உள்­ளது. அஜித்­தின் 61வது பட­மும் பொங்­க­லுக்கு வெளி­யா­கும் என்­ப­தால் ரசி­கர்­கள் மத்­தி­யில் இரு படங்­கள் குறித்த எதிர்­பார்ப்பும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

இதற்கு முன்பு கடை­சி­யாக கடந்த 2014ஆம் ஆண்டு விஜய்­யின் 'ஜில்லா'வும், அஜித்­தின் 'வீரம்' பட­மும் பொங்­கல் பண்­டி­கை­க்கு வெளி­யா­கின.