பயிற்சியில் நாயகிகள்

பயிற்சியில் நாயகிகள்

2 mins read
00e08760-1a89-4dd5-acc9-acde33b7ce80
ரித்திகா சிங் -

நடிகை ரித்­திகா சிங் தீவிர உடற்­பயிற்சி, குத்­துச்­சண்டை பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார். அவர் அடுத்து நடிக்­கும் படத்­துக்கு 'பாக்­ஸர்' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

இதில் ரித்­திகா குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யாக நடிக்­கி­றார் என்­பது சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

"நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு குத்­துச்­சண்­டைக் களத்­திற்கு வரு­வது உற்­சா­கம் அளிக்­கிறது. முன்­னை­விட அதி­கப்­ப­டி­யாக பயிற்சி செய்ய முடி­கிறது.

"குத்­துச்­சண்டை என் வாழ்க்­கை­யோடு கலந்­து­விட்ட ஒன்று. நாள் முழு­வ­தும் உடற்­ப­யிற்சி செய்­யச் சொன்­னா­லும் தயக்­கம் இல்­லா­மல் அதைச் செய்­வேன். தமிழ் சினி­மா­வில் எனக்­கும் ஓர் இடம் கிடைத்­தி­ருப்­ப­தும் ரசி­கர்­கள் என்னை வாழ்த்­து­வ­தும் நான் எதிர்­பா­ராத விஷ­யங்­கள். எனவே, ரசி­கர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்­றும் வகை­யில் செயல்­ப­டு­வேன்," என்­கி­றார் ரித்­திகா.

திரைப்­ப­டங்­களில் நடித்த வரை போதும் என்று லண்­ட­னுக்­குத் திரும்­பிய ஏமி ஜாக்­சன், மீண்­டும் தமிழ் சினி­மா­வில் நடிக்க உள்­ளார்.

ஏ.எல்.விஜய் இயக்­கும் புதிய படத்­தில் இவர்­தான் கதா­நா­யகி என்று கூறப்­ப­டு­கிறது.

பல ஆண்­டு­க­ளுக்கு முன் வெளி­யான 'மத­ரா­ச­பட்­டி­னம்' படத்­தில் நடிக்க ஏமி ஜாக்­சனை லண்­ட­னில் இருந்து அழைத்து வந்­தார் இயக்­கு­நர் ஏ.எல்.விஜய். அந்­தப் படத்­தில் நடித்த கையோடு, மீண்­டும் லண்­டன் செல்­வார் என்று கூறப்­பட்ட நிலை­யில், தமிழ் சினி­மா­வின் முன்­னணி நடி­கை­களில் ஒரு­வ­ராக உரு­வெ­டுத்­தார் ஏமி.

'தாண்­ட­வம்', 'தெறி', 'தங்­க­மகன்', 'கெத்து', 'தேவி' உள்­ளிட்ட படங்­களில் நடித்த அவர், ரஜி­னிக்கு ஜோடி­யா­க­வும் '2.0' படத்­தில் நடித்­தார். பின்­னர் லண்­டன் திரும்­பிய அவர், தன் காத­ல­ரு­டன் நெருக்­க­மாகி, ஒரு குழந்­தை­யை­யும் பெற்­றெ­டுத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், ஒரு புதுப்­ப­டத்­தின் நாய­கி­யாக நடிக்க ஏமி ஜாக்­சன் பொருத்­த­மாக இருப்­பார் எனக் கரு­து­கி­றா­ராம் ஏ.எல்.விஜய். இதை­ய­டுத்து, ஏமி ஜாக்­ச­னு­டன் நடத்திய பேச்­சு­வார்த்தை வெற்றி பெற்­றதை அடுத்து, அவர் இப்­படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.