இந்தியச் சந்தையில் சீறிப்பாயும் 'ஓடிடி' தளங்கள்

இந்தியச் சந்தையில் சீறிப்பாயும் 'ஓடிடி' தளங்கள்

2 mins read
146a60b0-88bf-415b-be84-6b4dbb92254f
ஓடிடியில் வெளியீடு கண்ட 'ஜெகமே தந்திரம்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி. -

அண்­மைக்­கா­ல­மாக எங்கு திரும்பினா­லும் ஓடிடி தளங்­கள் குறித்த பேச்­சு­தான் அதி­கம் காதில் விழு­கிறது.

தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னர் மட்டு­மல்­லா­மல் ஒட்­டு­மொத்த இந்­தி­யத் திரை­யு­ல­கத்­தி­ன­ரும் ஓடிடி தளங்­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­கின்­ற­னர்.

தர­மான படைப்­பு­க­ளுக்­குப் பார­பட்­சம் இன்றி ஆத­ரவு தரு­கின்­றன ஓடிடி தளங்­கள். இணை­யத்­தொடர்­கள், குறும்­ப­டங்­கள் என அனைத்­தும் வெளி­யீடு காண்­பது ரசி­கர்­களுக்கு வச­தி­யாக உள்­ளது.

சிறார்­கள் முதல் இளை­யர்­கள், பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ருக்­குமே இத்­த­ளங்­கள் தீனி போடு­கின்­றன.

இவை திரை­ய­ரங்க வசூலை எல்­லாம் மிக விரை­வாக பெற்­று­வி­டு­வ­தாக ஒரு தரப்­பி­னர் கூறு­கின்­ற­னர். படம் வெளி­யா­கும் முன்பே புதுப்­ப­டங்­களை இத்­த­ளங்­கள் முன்­கூட்­டியே பெருந்­தொகைக்கு வாங்­கி­வி­டு­கின்­றன. இத­னால் இயக்­கு­நர்­கள், கதா­நா­ய­கர்­கள், தயா­ரிப்­பா­ளர் ஆகிய மூன்று தரப்­பி­ன­ருமே ஓடிடி தளங்­க­ளுக்கு நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ ஆத­ரவு அளிக்­கின்­ற­னர்.

"இத­னால் நவீன உல­கின் மிகப்­பெ­ரிய ஓடிடி சந்­தை­களில் ஒன்­றாக இந்­தியா உரு­வெ­டுத்து வரு­கிறது. கடந்த சில ஆண்­டு­க­ளாக இந்தியா­வில் மின்­னி­லக்கத் தொழில்­நுட்­பம், விவேக திறன்­பே­சித் துறை­கள் பெரும் வளர்ச்சி கண்­டுள்­ளன.

"உல­கி­லேயே இளைய தலை­மு­றை­யி­னரை அதிக எண்­ணிக்கை­யில் கொண்­டி­ருக்­கும் ஒரு மாபெரும் ஓடிடி சந்­தை­யாக இந்­தியா முக்­கி­யத்­து­வம் பெற்­றி­ருக்­கிறது. ஒரு திரைப்­ப­டத்தை ஒரே சம­யத்­தில் பல்­வேறு மொழி­களில் வெளி­யிட ஓடிடி தளங்­கள் கைகொடுக்­கின்­றன. ஒரே சமயத்­தில் உல­கம் முழு­வ­தும் வெளி­யா­வ­தால், வசூல் ரீதி­யில் தயா­ரிப்­பாளர்­கள் லாப­ம­டை­கி­றார்­கள்.

"இவ்­வாறு மொழி மாற்­றம் செய்­யப்­படும் திரைப்­ப­டங்­க­ளுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்து வரு­கிறது. மொழி எல்­லை­க­ளைத் தாண்டி இந்­தப் படங்­கள் நாடு முழு­வ­தும் உள்ள ரசி­கர்­க­ளால் வர­வேற்­கப்­படு­கிறது.

"அதே­ச­ம­யம் படம் குறித்த விமர்­ச­னங்­கள் இயக்­கு­நர்­க­ளி­டம் உள்ள நிறை, குறை­க­ளைச் சுட்டிக்­காட்­டு­கின்­றன. இதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொள்­வ­தாக அனு­பவ இயக்கு­நர்­க­ளும்­கூட வெளிப்­ப­டை­யா­கச் சொல்­வது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கிறது.

"மொத்­தத்­தில் ஓடிடி தளங்­கள் சீறிப்பாய்­கின்­றன. இனிவரும் நாள்களில் அவற்­றின் வளர்ச்சி பிர­மிக்க வைக்­கும்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்புள்­ளி­கள்.

இந்­தி­யா­வில் சந்தா செலுத்தி ஓடிடி சேவை­க­ளைப் பெறு­ப­வர்­களின் எண்­ணிக்கை, 2019ஆம் ஆண்டு­டன் ஒப்­பி­டும்­போது 2021ஆம் ஆண்­டில் சுமார் 70 விழுக்­கா­டு அள­வுக்கு வளர்ச்சி அடைந்­தி­ருக்­கிறது.

"இப்­போது 110 மில்­லி­யன் இந்­தி­யர்­கள், சந்தா செலுத்தி ஓடிடி தளங்­களில் வெளி­யா­கும் படைப்பு­களைப் பார்த்து வரு­கி­றார்­கள்.

"இது இந்­தி­யச் சந்­தை­யில் வெறும் 15% மட்­டுமே. மீத­முள்ள 85 விழுக்­காடு மக்­க­ளைக் குறி­வைத்து இத்­த­ளங்­கள் களத்­தில் முழு­வீச்­சில் இறங்­கி­யி­ருக்­கின்­றன என்­றும் விவ­ர­ம­றிந்­த­வர்­கள் சுட்டிக்­காட்­டு­கின்­றனர்.

இனி வரும் நாள்களில் சில முன்னணி நாயகர்களும் ஓடிடி தளங்களை சொந்தமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆஹா என்ற பெயரில் ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.