தனது மகன் யுவன் சங்கர் ராஜாவின் 43வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார் இசை யமைப்பாளர் இளையராஜா.
இது தொடர்பாக வெளியிட்ட காணொளிப்பதிவு ஒன்றில் அவர் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"யுவன் பிறந்தபோது நான் ஒரு பாடல் பதிவில் இருந்தேன். அது 'சினோரீட்டா' என்று தொடங்கும் பாடல். அப்போதுதான் யுவன் பிறந்த தகவல் கிடைத்தது," என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
யுவனுக்கு அவரது ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

