நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் சிறுவன் ரித்விக் (படம்) ஒப்பந்தமாகி உள்ளான்.
அண்மைக்காலமாக யூடியூப் தளத்தில் பிரபலமாக உள்ள ரித்விக், தனது காணொளிகளில் இடம்பெறும் அனைத்து கதாபாத்தி ரங்களிலும் தாமே நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறான். 'O2' படத்தில் நயன்தாராவின் மகனாக ரித்விக்கின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.
'ஜெயிலர்' படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா, 'பருத்திவீரன்' சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் உள்ளனர்.
இந்நிலையில், ரஜினியின் பேரன் கதாபாத்திரத்தில் ரித்விக் நடிக்க இருப்பதாகத் தகவல்.
இதையடுத்து சமூக ஊடகங்களில் அச்சிறுவனுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

