தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன

1 mins read
5d913bbc-90e2-4078-a971-099808c614e6
சிறந்த நடிகருக்கான விருது பெறும் விக்ரம். -

கடந்த 2009 முதல் 2014 வரை­யி­லான ஆறாண்­டு­க­ளுக்கு திரைப்­பட விரு­து­களை அறி­வித்­தி­ருந்­தது தமி­ழக அரசு. இந்­நிலை­யில், விருது வழங்­கும் விழா நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்­வில் தமி­ழக செய்தித் துறை அமைச்­சர் சாமி­நா­தன், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகிய இரு­வ­ரும் கலந்து கொண்டு விருது பெற்­ற­வர்­களுக்கு வாழ்த்து தெரி­வித்­தனர்.

நடி­கர்­கள் விக்­ரம், ஜீவா, ஆர்யா, பாண்­டி­ராஜ், பாபி சிம்ஹா, ராக­வன், தம்பி ராமையா, சமுத்­தி­ர­கனி, நடி­கை­கள் அஞ்­சலி, ஐஸ்­வர்யா, இயக்­கு­நர்­கள் ஹெச். வினோத், பிரபு சால­மன், ராம் உள்­ளிட்ட ஏரா­ள­மான திரைக்­க­லை­ஞர்­கள் நேரில் வந்து விரு­து­களைப் பெற்­றுக் கொண்­ட­னர்.

சிறந்த பாட­லா­சி­ரி­ய­ருக்­காக மூன்று விரு­து­கள் மறைந்த கவி­ஞர் நா.முத்­துக்­கு­மா­ருக்கு வழங்­கப்­பட்­டது. அவர் சார்­பாக அவ­ரது மக­னும் மகளும் விரு­து­களைப் பெற்­ற­னர்.

சின்­னத்­திரை கலை­ஞர்­க­ளுக்­கும் விருது வழங்­கப்­பட்­டது.