கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஆறாண்டுகளுக்கு திரைப்பட விருதுகளை அறிவித்திருந்தது தமிழக அரசு. இந்நிலையில், விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் விக்ரம், ஜீவா, ஆர்யா, பாண்டிராஜ், பாபி சிம்ஹா, ராகவன், தம்பி ராமையா, சமுத்திரகனி, நடிகைகள் அஞ்சலி, ஐஸ்வர்யா, இயக்குநர்கள் ஹெச். வினோத், பிரபு சாலமன், ராம் உள்ளிட்ட ஏராளமான திரைக்கலைஞர்கள் நேரில் வந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த பாடலாசிரியருக்காக மூன்று விருதுகள் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பாக அவரது மகனும் மகளும் விருதுகளைப் பெற்றனர்.
சின்னத்திரை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

