கமல்ஹாசனின் கம்பீரக் குரலில் 'பொன்னியின் செல்வன்' முன்னோட்டக் காட்சி

1 mins read
2bcddfe8-375d-4fe5-8aae-7f7cb500bb44
படம்: இணையம் -
multi-img1 of 2

'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து இதை வெளியிட்டனர்.

3.23 நிமிடங்கள் நீடித்த முன்னோட்டக் காட்சிக்கு நடிகர் கமல்ஹாசனின் குரல் கொடுத்துள்ளார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டும் பாகங்களாக இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அனைத்துலக அளவில் வெளியிடப்படவுள்ளது.

Watch on YouTube