பொன்னியின் செல்வன் இசை வெளியீடு

மணி­ரத்­னம் இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள 'பொன்­னி­யின் செல்­வன்' முதல் பாகத்­தின் இசை வெளி­யீட்டு விழா சென்­னை­யில் பிரம்­மாண்­ட­மாக நடந்­தே­றி­யது.

படத்­தில் நடித்­துள்ள ஜெயம் ரவி, கார்த்தி, விக்­ரம், திரிஷா, ஐஸ்­வர்யா ராய் எனப் பெரும்­பா­லா­னோர் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர்.

சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக ரஜி­னி­யும் கம­லும் கலந்­து­கொண்டு படக்­கு­ழு­வி­ன­ருக்­கும் இயக்­கு­நர் மணி­ரத்­னத்­துக்­கும் பாராட்டு தெரி­வித்­த­னர்.

கல்கி எழுதியதை படமாக்க விரும்பிய மணிரத்னம்

மணி­ரத்­னம் பேசு­கை­யில், 'பொன்­னி­யின் செல்­வன்' என்ற அற்­பு­த­மான படைப்­பைத் தந்த எழுத்­தா­ளர் கல்­கிக்கு நன்றி தெரி­வித்­தார். மிகப் பிரம்­மாண்­ட­மாக இப்­ப­டத்­தைத் தயா­ரிக்க முன்­வந்த இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் சுபாஷ் கர­ணுக்­கும் நன்றி தெரி­விப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"இந்­தப் படத்தை 'பாகு­பலி' போன்று உரு­வாக்­கு­வீர்­களா என்று சுபாஷ் கேட்­ட­போது, இல்லை என்­றேன். அதே­போல், பத்­மா­வதி இந்­திப்­ப­டம் போல் இருக்­குமா என்று கேட்­ட­போ­தும் அதற்கு வாய்ப்­பில்லை என்­றேன்.

"அப்­ப­டி­யா­னால், இந்­தப் படம் எந்த மாதிரி இருக்­கும் என்று கேட்­டார். அப்­போது, அம­ரர் கல்கி எழு­தி­யி­ருப்­ப­தைப் பட­மாக்க விரும்­பு­கி­றேன் என்­றேன். அன்று சொன்­ன­ப­டியே படம் உரு­வாகி உள்­ளது," என்­றார் மணி­ரத்­னம்.

ரஜினிக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்ட மணிரத்னம்

ரஜி­னி­காந்த் பேசு­கை­யில், 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் தாம் சிறு வேடத்­தி­லா­வது நடிப்­ப­தற்கு வாய்ப்பு தர வேண்­டும் என்று மணி­ரத்­னத்­தி­டம் கேட்­ட­போது அவர் மறுத்­து­விட்­ட­தாக கூறி­னார்.

"ஒரு­முறை இந்­தக் கதை­யில் உள்ள பெரிய பழு­வேட்­டை­ய­ராக நடிக்க விரும்­பு­வ­தாக மணி­ரத்­னத்­தி­டம் கூறி­னேன். ஆனால் அவரோ, 'உங்­க­ளு­டைய ரசி­கர்­க­ளி­டம் என்­னால் திட்­டு­வாங்க இய­லாது. அந்­தப் பாத்­தி­ரம் உங்­க­ளுக்­கா­னது அல்ல' என்று கூறி, வாய்ப்பு தர மறுத்­து­விட்­டார்.

"இன்­னொரு தரு­ணத்­தில் பிர­பல பத்­தி­ரிகை ஒன்­றில், மறைந்த முதல்­வர் ஜெய­ல­லிதா வாச­கர்­க­ளின் கேள்­விக்­குப் பதி­ல­ளித்து வந்­தார். ஒரு வாச­கர் 'பொன்­னி­யின் செல்­வன்' படம் இப்­பொ­ழுது எடுக்­கப்­பட்­டால், அதில் வந்­தி­யத்­தே­வன் கதா­பாத்­தி­ரத்­திற்கு எந்த நடி­கர் பொருத்­த­மாக இருப்­பார் என்று கேட்­டி­ருந்­தார். அதற்கு ஜெய­ல­லிதா, ஒரே வரி­யில் ரஜி­னி­காந்த் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"அதைக் கேள்­விப்­பட்­ட­து­டன் மகிழ்ச்சி அடைந்­தேன். பிற­கு­தான் 'பொன்­னி­யின் செல்­வன்' புத்­த­கத்தைப் படிக்க ஆரம்­பித்­தேன். மேலும், அந்­தக் கதை பட­மா­கும்­போது அதில் நடிக்க வேண்­டும் எனும் ஆசை­யும் ஏற்­பட்­டது," என்­றார் ரஜி­னி­காந்த்.

ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்ற விக்ரம்

முன்­ன­தாக, அவர் நிகழ்ச்சி நடக்­கும் அரங்­குக்­குள் வந்­த­போது பலத்த கர­வொலி எழுந்­தது. மேலும், விக்­ரம் உள்­ளிட்ட சில நடி­கர்­கள் அவ­ரது காலில் விழுந்து ஆசி பெற்­ற­னர்.

நடிகை ஐஸ்­வர்யா ராயைப் பார்த்­த­தும், ரஜி­னியே அவர் அரு­கில் சென்று, மென்­மை­யாக அர­வ­ணைத்து நலம் விசா­ரித்­தார்.

ஐஸ்வர்யா ராய்: மணிரத்னம்தான் என் குரு

இந்­நி­கழ்­வில் பேசிய ஐஸ்­வர்யா, என்­றும் தமக்கு மணி­ரத்­னம்­தான் குரு­நா­தர் என்று பணி­வு­டன் குறிப்­பிட்­டார்.

'இரு­வர்' படத்­தின் மூலம் அவ­ரு­ட­னான திரைப்­ப­ய­ணம் தொடங்­கி­யது என்­றும் 'பொன்­னி­யின் செல்­வன்' படம் காலத்­தைக் கடந்து ரசி­கர்­கள் மன­தில் என்­றும் நிலைத்­தி­ருக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

"ரஜினி, கமல் ஆகி­யோ­ரு­டன் ஒரு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க வேண்­டும் என்ற கனவு நிறை­வேறி உள்­ளது," என்­றார் ஐஸ்­வர்யா.

இப்­ப­டத்­தின் மற்­றொரு நாய­கி­யான திரி­ஷா­வும் இது­போன்ற பிரம்­மாண்ட படைப்­பில் இடம்­பெற வேண்­டும் என்ற கனவு நன­வாகி உள்­ளது என்­றார்.

"இந்த நிகழ்ச்­சி­யின் முதல் வரி­சை­யில் அமர்ந்­தி­ருக்­கும் அனை­வ­ரை­யும் பாருங்­கள். என் கண்ணே பட்­டு­வி­டும்­போல் இருக்­கிறது," என்­றார் திரிஷா.

கமல்ஹாசன்: மணிரத்னத்துக்கும் எனக்கும் இடையே போட்டி நிலவியது

'பொன்­னி­யின் செல்­வன்' கதையை யார் முத­லில் பட­மாக்­கு­வது என்­பது தொடர்­பாக தமக்­கும் மணி­ரத்­னத்­துக்­கும் இடையே ஒரு­வி­தப் போட்டி நில­வி­ய­தாக நடி­கர் கமல்­ஹா­சன் தெரி­வித்­தார்.

"இந்­தக் கதை­யின் உரி­மை­யைக் காலஞ்­சென்ற முதல்­வர் எம்­ஜி­ஆர் வாங்­கி­யி­ருந்­தார். அவ­ரைச் சந்­தித்­த­போது என்­னி­டம் அந்த உரி­மையை ஒப்­ப­டைத்து விரை­வில் திரைப்­ப­ட­மாக எடுத்­து­வி­டு­மாறு அறி­வு­றுத்­தி­னார். ஏன் அப்­ப­டிச் சொன்­னார் என்று அப்­போது புரி­ய­வில்லை.

"அதன் பிறகு மேலும் பல­ருக்கு அதே எண்­ணம் வந்­து­விட்­டது. நானும் முயற்சி செய்­தேன், முடி­ய­வில்லை. மணி­ரத்­னம் சாதித்­து­விட்­டார்.

"ஒரு­முறை சிவாஜி கணே­ச­னைச் சந்­தித்­த­போது வந்­திய தேவன் கதா­பாத்­தி­ரத்­தில் ரஜினி நடிக்க வேண்­டும் என்­றார். எனக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. நான் அந்த கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க திட்­ட­மிட்­டி­ருந்­தேன். எனக்கு என்ன கதா­பாத்­தி­ரம் என்று நடி­கர் தில­கத்­தி­டம் கேட்­ட­போது, அருண்­மொழி வர்­மன் வேடத்­தில் நடிக்­கச் சொன்­னார்.

"அது நடக்­கா­மல் போனது. இன்று ரஜினி ஏற்க நினைத்த வேடத்­தில் கார்த்­தி­யும் எனக்­கா­கத் தேர்வு செய்த பாத்­தி­ரத்­தில் ஜெயம்­ர­வி­யும் நடித்­துள்­ள­னர்.

"ஏ.ஆர்.ரகு­மா­னின் ஒவ்­வொரு பாட­லும் எனது இத­யத் துடிப்பை அதி­க­ரிக்க வைத்­தது," என்­றார் கமல்­ஹா­சன்.

ஜெயம் ரவி: நாயகர்களுக்குள் போட்டி நிலவியது உண்மை

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் கதா­நா­ய­கர்­க­ளுக்­குள் போட்டி இருந்­தது உண்மை என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசி­னார் ஜெயம் ரவி. மற்ற படங்­க­ளுக்­கும் மணி­ரத்­னம் படத்­துக்­கும் உள்ள வித்­தி­யா­சத்தை தம்­மால் இப்­போது புரிந்­து­கொள்ள முடி­கிறது என்­றார் அவர்.

"மற்ற படங்­களில் வச­னத்­துக்கு முக்­கி­யத்­து­வம் இருக்­கும். மணி­ரத்­னம் படத்­தில் வச­னத்தை விட, உணர்ச்­சி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றார். இந்­தப் படத்­தில் கதா­நா­ய­கர்­க­ளுக்­குள் போட்டி இருந்­தது. ஆனால் அது நல்ல எண்­ணத்­து­டன் உரு­வான போட்டி.

"படப்­பி­டிப்பு முடிந்து வீட்­டுக்­குப் போன பிற­கும், 'நீ ஏற்று நடிக்­கும் ராஜ­ராஜ சோழன் கதா­பாத்­தி­ரத்தை மறந்­து­வி­டாதே. உன் நடை, உடை, பேச்சு என அனைத்­தி­லும் ராஜ­ராஜ சோழன் இருக்க வேண்­டும்' என்று மணி­ரத்­னம் அறி­வுரை வழங்கி­னார். படம் முடி­யும் வரை அதைப் பின்­பற்­றி­னேன்," என்­றார் ஜெயம் ரவி.

கார்த்தி: மொத்த திரையுலகையும் இப்படத்தில் காணலாம்

மொத்த தமிழ் திரை­யு­ல­கத்­தை­யும் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் பார்க்க முடி­யும் என்­றார் நடி­கர் கார்த்தி.

இந்­தப் படத்­தில் எல்லா கதா­பாத்­தி­ரங்­க­ளுமே முக்­கி­ய­மா­னவை என்­றும் அவை அனைத்­துமே மிக அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். பல ஆண்­டு­க­ளாக தமிழ் மக்­கள் எதிர்­பார்த்­துக்கொண்­டிருந்த ஒரு தரு­ணம் வந்­துள்­ளது. இந்­தப் படத்­தில் நானும் ஓர் அங்­க­மாக இருப்­பது பெருமை அளிக்­கிறது," என்றார் கார்த்தி.

ரகுமான் அனுபவம்

இப்படத்தின் பாடல்களுக்குத் தாம் இசையமைத்த பின்னர், ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றுக்கு மணிரத்னம் ஒப்புதல் அளித்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

இந்தப் பாடல்களுக்காக தாம் பார்த்துப் பார்த்து இசை அமைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

"சில விஷயங்களை மனதில் கற்பனை செய்துகொண்டு தமிழ், தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன்," என்றார் ரகுமான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!