கார்கில் போர் நினைவிடத்தில் அஜித் மரியாதை

கார்கில் போர் நினைவிடத்தில் அஜித் மரியாதை

2 mins read
011ad20d-4585-4e11-9f24-37f75cafac5a
-

கார்­கில் போர் நினை­வி­டத்­துக்­குச் சென்று, அப்­போ­ரில் உயிர்­நீத்த இந்­திய வீரர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தி உள்­ளார் நடி­கர் அஜித்.

அவ்­வப்­போது திடீர்ப் பய­ணம் மேற்­கொள்­வ­தும் அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வ­தும் அஜித்­தின் வழக்­கம். அவர் நேர­டி­யாக இதைச் செய்­வ­தில்லை என்­றா­லும் அவ­ரது மேலா­ளர் அல்­லது மக்­கள் தொடர்­பா­ளர் அவ­ரது பய­ணம் குறித்த விவ­ரங்களைச் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பகிர்ந்து வரு­கி­றார்.

அந்த வகை­யில், அண்­மை­யில் காஷ்­மீ­ரில் உள்ள லடாக் பகு­திக்குச் சென்று, அங்கு எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­ப­டங்­களை வெளி­யிட்­டி­ருந்­தார் அஜித்.

இந்­நி­லை­யில், இம­ய­ம­லைப் பகு­திக்கு இரு­சக்­கர வாக­னத்­தில் சென்­றுள்ள அவர், அங்கு பல்­வேறு இடங்­க­ளைச் சுற்­றிப்­பார்த்து வரு­கி­றார்.

லடாக் சென்­றி­ருந்­த­போது, அவ­ரது அடுத்த படத்­தின் நாய­கி­யான மஞ்சு வாரி­ய­ரும் உடன் இருந்­தார். இரு­வ­ரும் அங்கு எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­கள் வெளி­யா­கின.

இந்­நி­லை­யில், கார்­கில் போர் நினை­வி­டத்­துக்­குச் சென்ற அஜித், அங்கு 'சல்­யூட்' அடித்து மரி­யாதை செலுத்­தும் காட்­சி­யு­டன் கூடிய புகைப்­ப­டம் வெளி­யாகி உள்­ளது.

மேலும் அப்­ப­கு­தி­யில் கட­மை­யாற்­றும் இந்­திய ராணுவ வீரர்­களு­டன் கலந்­து­ரை­யாடி, அவர்­களு­டன் புகைப்­ப­ட­மும் எடுத்­துக்­கொண்­டுள்­ளார் அஜித்.

இந்­தப் புகைப்­ப­டங்­களை அஜித் ரசி­கர்­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

தற்­போது மூன்­றா­வது முறை­யாக, இயக்­கு­நர் ஹெச்.வினோத் இயக்­கத்­தில், போனி கபூர் தயா­ரிப்­பில் உரு­வாகி வரும் இன்­னும் பெய­ரி­டப்­ப­டாத படத்­தில் நடித்து வரு­கி­றார் அஜித்.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு விசா­கப்­பட்­டி­னத்­தில் நடந்த படப்­பி­டிப்­பில் கலந்­து­கொண்டு நடித்த அவர், திடீ­ரென இம­ய­ம­லைப் பகு­திக்­குச் சென்­று­விட்­டார்.

எனி­னும், அடுத்­த­கட்ட படப்­பி­டிப்பு தொடங்­கும் முன்­னர் அவர் சென்னை திரும்­பு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கார்கில் போர் நினைவிடத்தில் அஜித்.