திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
0b4fd9c4-cf4b-4c34-bf6f-d119bc74e242
-
multi-img1 of 2

 நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதற்கு பலன் கிடைத்துள்ளது. சங்கர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அவருக்கு ஏழு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. நாயகனாக நடித்த போதும் கூட அவர் இவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாகப் பெற்றதில்லையாம். இனி தமிழிலும் அவர் இதே சம்பளத்தை கேட்கக்கூடும் என்கிறார்கள்.

 தாம் நடித்த தெலுங்குப் படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்ற ரெஜினா, இரட்டை அர்த்தத்துடன் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ரெஜினா பேசும்போது, ஆண்களை 'நூடுல்ஸ்' உடன் ஒப்பிட்டு கேலி செய்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமக்கு ஒரு நகைச்சுவை குறித்து தெரியும் என்றும் அதை பொது வெளியில் தெரி விக்க மனமில்லை என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர். எனினும், இவ்வாறு இரட்டை அர்த்தத்துடன் பேசுவது முதிர்ச்சியான செயல் அல்ல என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.