'பொன்னியின் செல்வன்' திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், இயக்குநர் சங்கரும் அதே போன்ற சரித்திரக் கதையை திரைப்படமாக்கும் முயற்சியைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிப்பதாகத் தகவல். இதுதொடர்பாக முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பெற்றிராத தொகை சூர்யாவுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் என்றும் லைகா அல்லது சோனி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

