நடிக்க வந்த பொறியியலாளர்

நடிக்க வந்த பொறியியலாளர்

3 mins read
b36945fa-5fbc-4366-8fd1-8bdcbdfd950c
-

தொலைக்­காட்சி செய்தி வாசிப்­பா­ள­ராக வேண்­டும் என்­ப­து­தான் தமது சிறு வயது கன­வாக இருந்­தது என்­கி­றார் இளம் நாயகி தீப்­ஷிகா.

ஆனால் நாள்­க­ளின் போக்­கில், அந்த ஆசை குறைந்து, நடி­கை­யா­கி­விட்­ட­தா­கச் சொல்­கிறார்.

"சிறு வய­தில் நடந்­தவை இன்­னும் பசு­மை­யாக நினை­வில் உள்­ளன. தொலைக்­காட்­சி­யில் செய்தி வாசிப்­பா­ளர்­கள் தோன்­றும்­போது அவர்­கள் அணிந்­தி­ருக்­கும் புடவை, காதணி­கள், ஒப்­பனை செய்துகொண்­டுள்ள விதம் என அனைத்­தை­யும் கவ­னிப்­பார் அம்மா. எது அழ­காக உள்­ளது, எது சரி­யாக இல்லை என்று ஏதா­வது குறிப்­பு­க­ளைச் சொன்ன­ப­டியே இருப்­பார்.

"அப்­போ­து­தான் செய்தி வாசிக்­கும் பணி மீதான ஆர்­வம் அதி­க­ரித்­தது. செய்தி வாசிப்­பா­ளர்­களை இந்த அள­வுக்கு நேயர்­கள் கவ­னிப்­பார்­கள் என்­பதைப் புரிந்­து­கொண்­டேன்," என்று சொல்­லும் தீப்­ஷிகா, தற்­போது தமிழில் இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மாகி நடித்து வரு­கி­றார்.

தெலுங்குப் படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான போதி­லும், தமி­ழில்­தான் கூடு­தல் கவ­னம் செலுத்த விரும்­பு­கி­றா­ராம். மேலும், ஓர் இசைத் தொகுப்­பிலும் ஒப்­பந்­த­மாகி உள்­ள­வர், ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மா­டு­வ­தற்­கும் தயங்­கு­வதில்லை.

"தெலுங்­கில் மூன்று படங்­களில் நடிக்­கி­றேன். அதில் 'மைக்­கேல்' என்ற படத்­தில் சிறிய கதா­பாத்­திரம்­தான். ஆனால் கதைப்­படி மிக முக்கி­ய­மா­னது. அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் எனது உடல்மொழி நிச்­ச­யம் ரசி­கர்­க­ளால் பெரி­தும் பேசப்­படும். அது­மட்­டு­மல்ல, ஐந்து மொழிகளில் அப்­ப­டம் வெளி­யா­கிறது.

"ரவி­தேஜா தயா­ரிப்­பில் ஒரு படம். தலைப்பு, மற்ற விஷ­யங்­கள் குறித்து இப்­போதே எது­வும் சொல்ல இய­லாது. மேலும், நாய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றேன்," என்­கி­றார் தீப்­ஷிகா.

தமி­ழில் பொட்­டன்­ஷி­யல் ஸ்டூ­டி­யோஸ் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் படத்­தில் விக்­ரம் பிர­பு­வு­டன் இணைந்­துள்ள தீப்­ஷி­காவை இயக்­கு­நர் பர­தன் இயக்­கும் படத்­தில் 'கேசா­தி­பா­தம்' எனத் தொடங்கும் பாட­லில் பார்க்க முடியும்.

இவ­ரது பெற்­றோ­ரின் சொந்த ஊர் சென்னை. அச்சு அசல் தமிழ்ப் பெண்­ணா­கவே வளர்ந்து ஆளாகி உள்­ளார். கணினிப் பொறி­யி­யல் படிப்பை முடித்­துள்­ளார்.

படிக்­கும்­போதே பட வாய்ப்­பு­கள் தேடி வந்­த­ன­வாம். மருத்­து­வ­ராக வேண்­டும் என்பது­தான் இவ­ரது கன­வு­. மருத்­து­வப் படிப்­புக்­கான நுழை­வுத் தேர்­வும் எழுதி உள்ளார்.

"சிறு வய­தில் இருந்தே படிப்­பில் ஆர்­வம் அதி­கம். உயி­ரி­யல் துறை­யில் மிகுந்த ஈடு­பாடு உண்டு. அத­னால்­தான் மருத்­து­வம் படிக்க விரும்­பி­னேன். ஆனால் பொறி­யி­யல்­தான் படிக்க முடிந்­தது. என் தந்தை தொழி­ல­தி­பர். அம்மா இல்­லத்­த­ரசி.

"மருத்­து­வ­ராக விரும்­பிய தங்­கள் மகள் திடீ­ரென சினி­மா­வில் நடிக்­கப் போவ­தா­கக் கூறி­ய­தும் என் பெற்­றோ­ருக்கு அதிர்ச்சி. எனி­னும் என் விருப்­பத்­துக்கு குறுக்கே நிற்­க­வில்லை. எடுத்த எடுப்­பி­லேயே சில பெரிய படங்­களில் ஒப்­பந்­த­மா­ன­தால், அந்த அதிர்ச்சி என் மீதான கோப­மாக மாற­வில்லை," என்று சிரிக்­கி­றார் தீப்­ஷிகா.

சிறிது நேரமே திரை­யில் தோன்­றி­னா­லும் படம் பார்க்கும் ரசி­கர்­கள் மன­தில் ஒரு­வித தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­பதே தனது ஆசை என்று மற்ற நடி­கை­க­ளைப் போலவே இவ­ரும் சொல்­கி­றார்.

இதைச் சாதிக்க உத­வும் கதா­பாத்­தி­ரங்­கள் அனைத்­துமே தமது கன­வுப் பாத்­தி­ரங்­கள்­தான் என்­கி­றார்.

"அண்­மைய செய்­தி­களை அறிந்துகொள்­வ­தில் நாட்­டம் அதி­கம். இதன் கார­ண­மா­கவே செய்தி வாசிப்­பா­ள­ராக விரும்­பி­னேன். ஓய்வு கிடைத்­தால் நிறைய எழு­து­வேன். பிடித்த நடி­கர் ரஜினி. அவ­ரு­டைய ஸ்டைல், வேகம், நடிப்பு என எல்­லாம் பிடிக்­கும்.

"அப்­பு­றம் கமல் சார். கலைக்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்­துக்கொண்டுள்­ளது பிர­மிப்பை ஏற்­ப­டுத்­து­கிறது.

"அடுத்து ஹாலி­வுட் வரை­யி­லும் போய் தமிழ் சினி­மா­வை­யும் தமி­ழர்­களை­யும் தலை­நி­மிர வைத்­துள்ள தனு­ஷின் தீவிர ரசி­கை­களில் நானும் ஒருத்தி. அவ­ரு­டைய நடிப்­புக்கு நான் அடிமை," என்று சொல்­லும் தீப்­ஷிகா, தம்­மால் இயன்­ற­வரை இந்­தத் துறை­யில் நீடிக்க விரும்பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"கல்வி என்­பது மிக­வும் அவ­சி­ய­மான ஒன்று. கல்­வி­ய­றிவு இருந்­தால்­தான் நமக்கு என்ன தேவை, நாம் எதை நோக்­கிச் செல்லவேண்­டும் என்­ப­தில் தெளிவு இருக்­கும். படித்­த­வர்­கள் எங்கே போனா­லும் உரிய மரி­யாதை கிடைக்­கும். அதை நான் கண்­கூ­டா­கப் பார்க்­கி­றேன்.

"முன்பே திரை­யு­ல­குக்கு வந்­தி­ருந்­தால் சில வாய்ப்பு­கள் முன்­கூட்­டியே கிடைத்­தி­ருக்­கும். இந்­நே­ரம் எனக்­கான உய­ரத்தைத் தொட்டி­ருக்க முடி­யும் என்­றும் நினைக்கி­றேன். "மற்­ற­படி படிப்பு எனக்கு முதல் மரி­யா­தை­யைப் பெற்­றுத் தந்துள்ளது," என்­கி­றார் சமர்த்­துப் பெண் தீப்­ஷிகா.

, :

  