சூர்யா, இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம் என்கிறார் திஷா பதானி.
பிற மொழிப் படங்களில் நடித்து வரும் இவருக்கு, 'சூர்யா 42' தான் தமிழில் அறிமுகப் படம்.
"பெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தில் நானும் இடம்பெற்றுள்ளது உற்சாகம் தருகிறது. இதில் எனக்கு தனித்துவமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
"இதுவரை இதுபோன்ற வேடத் தில் நடித்ததில்லை. என்னால் முடிந்த அளவுக்கு ரசிகர்களைக் கவர முயற்சி செய்வேன்.
"நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை ரசிகர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவேன். ஏனெனில் திரையுலகில் ரசிகர்களை மகிழ்விப்பவர்களுக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கும். இதை நான் நன்றாக உணர்ந்துள்ளேன்," என்கிறார் திஷா பதானி.
, :