எந்த விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் தமக்கும் தனது குடும்பத்தினருக்கும் உள்ளது என்கிறார் ஜெயம் ரவி.
நேற்று முன்தினம் தமது 42வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், திரையுலகில் இன்று தாம் அடைந்துள்ள உயர்வுக்கு அண்ணன் 'ஜெயம்' ராஜாதான் காரணம் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
"தரமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் எனது தரப்பில் தோல்வி படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக கருதுகிறேன்.
"அதுவும் 'ஜெயம்' திரைப்படத்தை முடித்துவிட்டு எட்டு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தேன்.
"நல்ல படங்களுக்காக காத்திருப்பது தவறில்லை என்று என் தந்தை அறிவுறுத்தி உள்ளார்.
"எனது படங்களில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமல்லாமல், அதில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள். அப்போதுதான் திருத்திக்கொள்ள முடியும்," என் கிறார் ஜெயம் ரவி.

