'இரவு': நிஜத்தில் வரும் கதாபாத்திரங்களின் கதை

'இரவு': நிஜத்தில் வரும் கதாபாத்திரங்களின் கதை

1 mins read
64776d00-8c0b-41af-ab9f-6b910b9fd398
நடிகை ஷிவானியுடன் வெற்றி. -

கணினி விளை­யாட்­டு­களை வடி­வ­மைக்­கும் நாய­கன் எந்­த­வி­த­மான எதிர்­பார்ப்­பு­களும் இன்றி வாழ்ந்துகொண்­டி­ருக்­கி­றான்.

இந்­நி­லை­யில் அவன் உரு­வாக்­கிய கதா­பாத்­தி­ரங்­கள் திடீ­ரென நேரில் வரத் தொடங்­கு­கின்­றன. இதை­ய­டுத்து ஓர் இரவு வேளை­யில் நடக்­கும் பர­ப­ரப்­பான சம்­ப­வங்­கள்­தான் கதை.

'இரவு' என்ற தலைப்­பில் உரு­வா­கும் இப்­ப­டத்­தில், 'எட்டு தோட்­டாக்­கள்' பட நாய­கன் வெற்றி நடிக்­கி­றார். அவ­ரது ஜோடி­யாக ஷிவானி ஒப்­பந்­த­மாகி உள்­ளார். மேலும் மன்­சூர் அலி­கான், சந்­தான பாரதி, ராஜ்­குமார், பொன்­னம்­ப­லம் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

திகில் பட­மாக உரு­வா­கும் 'இரவு', அனை­வ­ரை­யும் கவ­ரும் வகை­யில் இருக்­கும் என்­கி­றார் இயக்­கு­நர் ஜெக­தீ­சன். இவர் ஏற்­கெ­னவே 'பக்­ரீத்' என்ற படத்தை இயக்கி உள்­ளார்.

"நல்ல கதை­கள் நிச்­ச­யம் வெற்றிபெறும். அத­னால் எப்­போ­துமே கதைத் தேர்­வில் மிகக் கவ­ன­மாக உள்­ளேன்," என்கிறார் வெற்றி.