'கோட்டை அரசி பேசுகிறேன்'

'கோட்டை அரசி பேசுகிறேன்'

3 mins read
1324bc05-2715-4a17-8c9a-2bb591d799a6
-

'காம்ப்­ளெக்ஸ்' என்ற பெய­ரில் உரு­வா­கும் புதிய படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் இவானா. தீவிர சினிமா ரசி­கர்­களால் இந்த இளம் நாய­கியை அடை­யா­ளம் கண்­டு­கொள்ள முடி­யும்.

கண்­டு­பி­டிக்க முடி­யா­த­வர்­க­ளுக்கு உதவ சிறு குறிப்பு. பாலா இயக்­கத்­தில் வெளி­யான 'நாச்­சி­யார்' படத்­தின் மூலம் 'கோட்டை அரசி'யாக தமிழ் ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மா­ன­வர் இவானா.

இவரது பூர்­வீ­கம் கேரளா. 'நாச்­சி­யார்' படம் வெளி­யான பிறகு 'ஹீரோ' படத்­தில் நடித்­துள்­ளார். அதன் பிறகு இரண்டு ஆண்­டு­கள் இவானா­வைப் பற்றி எந்­தத் தக­வ­லும் இல்லை.

ஏன் திடீர் இடை­வெளி என்ற கேள்­விக்கு, இவரது சுருக்­க­மான பதில், "இரண்டு ஆண்­டு­கள் கல்­லூ­ரிப் படிப்­பில் கவ­னம் செலுத்த வேண்­டி­ இ­ருந்­தது," என்­ப­து­தான். எனி­னும் படித்­துக்கொண்டே 'காம்ப்­ளெக்ஸ்', 'லவ் டுடே' என இரண்டு படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

"'நாச்­சி­யார்' படத்­தில் நடித்­த­போது அதன் இணை இயக்கு­நர் மந்­திரா வீர­பாண்­டி­யன் அண்­ணா­தான் எனக்கு தமிழ் சொல்­லிக்­கொ­டுத்­தார். அவர் திரு­வல்லாவைச் சேர்ந்­த­வர். நன்­றாக மலை­யா­ளம் பேசு­வார். அத­னால், என் பெற்­றோ­ருக்கு நல்ல தோழனா­கி­விட்­டார். அவர்­தான் 'காம்ப்­ளெக்ஸ்' படத்­தின் இயக்கு­நர்.

"கொரோனா தொற்­றுப் பர­வல் உச்­சத்­தில் இருந்­த­போது போக்­கு­வ­ரத்து தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்­தச் சூழ்­நி­லை­யி­லும், ஆபத்தை பொருட்­ப­டுத்­தா­மல் மந்­திரா அண்ணா எங்­க­ளைப் பார்க்க கேர­ளத்­துக்கு வந்து­விட்­டார். தன்­னு­டைய முதல் படத்­தில் எனக்கு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரம் இருப்­ப­தாக அவர் சொன்­ன­தும், உடனே அம்­மா­வும் அப்­பா­வும் என்ன கதை என்­று­கூட கேட்­கா­மல் அவ­ருக்­காக ஒப்­புக்­கொண்­டார்­கள். அந்த அள­வுக்கு பிறர் நல­னில் அக்­க­றை­யுள்ள அற்­பு­த­மான மனி­தர் அவர். நல்ல படைப்­பா­ளி­யும்­கூட," என்­கி­றார் இவானா.

இந்­தப் படத்­தில் எம்.எஸ்.பாஸ்­க­ரின் மக­ளாக நடிக்­கி­றா­ராம். கதைப்­படி இவா­னா­வும் அவ­ரது சகோ­த­ர­னும் இரட்­டைப் பிற­வி­கள். இவானாவை­விட அவ­ரது சகோ­தரன் உய­ரம் குறை­வா­ன­வ­ரா­கப் பிறந்­து­வி­டு­வார். அதனால் அவர் சந்­திக்­கும் 'உருவ கேலி'யும் அதி­லி­ருந்து அவர் எப்­படி மீண்டு வரு­கிறார் என்­ப­தும்­தான் கதை­யாம்.

"என் சகோ­த­ர­னுக்­கும் குடும்­பத்­துக்­கும் ஆத­ர­வாக இருக்­கும் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றேன். நிஜ வாழ்க்கை­யில் நானும் எனது சகோ­த­ர­னும் இரட்­டைப் பிற­வி­கள்­தான். பத்து வய­தாக இருக்­கும்­போது நாங்­கள் இருவருமே உய­ரம் குறை­வாக இருந்­தோம். அத­னால் இரு­வ­ருமே உருவ கேலிக்கு ஆளா­கி­யி­ருக்­கி­றோம்.

"இது ஒரு­வ­கை­யில் வணி­கப் படம்­தான். ஆனால், இதில் உருவ கேலியை மந்­திரா அண்ணா சுவாரசி­ய­மா­கக் கையாண்­டி­ருக்­கி­றார்," என்று 'காம்ப்­ளெக்ஸ்' படம் குறித்த எதிர்­பார்ப்பை மன­தில் அதி­க­ரிக்க வைக்­கி­றார் இவானா.

இவ­ரது சொந்த ஊர் கோட்­ட­யம் மாவட்­டத்­தில் உள்ள நாலு­கோடி என்ற சிறிய கிரா­மம். சினிமா­வுக்­கும் இவ­ரது குடும்­பத்­துக்­கும் அறவே தொடர்­பில்லை. பெற்­றோ­ரு­டன் திரை­ய­ரங்­குக்குச் சென்று படம் பார்ப்­பது மட்­டுமே தமக்­கும் சினி­மா­வுக்கும் உள்ள தொடர்பு என்று சிரிக்­கி­றார்.

"2012ஆம் ஆண்டு, 12 வய­தில், ஜானி ஆண்­டனி இயக்­கத்­தில், பிருத்­வி­ராஜ் நாய­க­னாக நடித்த 'மாஸ்­டர்ஸ்' படத்­தில் நடித்­தேன். அந்­தச் சம­யம் என் விருப்­பத்­தைக் கேட்­டார் என் அப்பா. மிகுந்த ஆர்­வத்­து­டன் நடிக்­கத் தயார் என்­றேன். அப்­பா­வும் அனு­மதி அளித்­தார்.

பிறகு மகள், பள்ளி மாணவி என்று சில வாய்ப்­பு­கள் தேடி வந்­தன. சில ஆண்­டு­களுக்­குப் பிறகு மலையாள நாளி தழில் வெளி­யான என் புகைப்­படத்தைப் பார்த்­து­விட்டு பாலா வாய்ப்பளித்தார்," என்கிறார் இவானா.