திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
4a872214-f621-4751-b133-e1edfe7abe85
-
multi-img1 of 3

 ஒருவரது தோற்றத்துக்கும் திறமைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்கிறார் அபர்ணா பாலமுரளி. தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து உருவக்கேலிக்கு ஆளாகும் நடிகைகளில்

இவரும் ஒருவர். இந்நிலையில் அண்மைய பேட்டியில், இது போன்ற கேலி, கிண்டல்கள் தம்மை வருத்தப்பட வைத்த தாகக் குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால், இப்போது எதுகுறித்தும் நான் வருந்துவதில்லை. உருவக்கேலி செய்பவர்களைக் கண்டுகொள்வதும் இல்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே பலர் என்னை ஏற்றுக்கொண்டு உள்ளனர். தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்குக்கு முன்னால் அவர்களின் தோற்றம் ஒன்றுமே இல்லை. அவர்கள் தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட வர்கள். ஒல்லியாக இருந்தால்தான் கதாநாயகி வாய்ப்பு தேடி வரும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்கிறார் அபர்ணா.

 திரைப்பட வாய்ப்புகள்

அறவே தேடி வராத நிலையில், இணையத் தொடர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் இலியானா.

சமந்தா, ரெஜினா, அமலா பால் உள்ளிட்ட பல நடிகைகள் இணையத் தொடர்களில் நடித்து வருகின்றனர். எதிர்பார்க்கும் ஊதியம் கிடைப்பதால் மேலும் பல நாயகிகள் இணையத் தொடர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்நிலையில், இலியானாவும் அந்தப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரு கதைகளில் நடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

 உதயநிதியுடன் 'மாமனிதன்' படத்தில் நடிக்கிறார் வடிவேலு. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி. இப்படக்குழுவினருடன் படப்பிடிப்பு அரங்கில் கேக் வெட்டி தமது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் வடிவேலு.