எங்கு சென்றாலும் தம்மைச் சுற்றி இருப்பவர்களை நண்பர்களாக மாற்றிக் கொள்வது தமது இயல்பு என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
சிறு வயதில் பெரும் பாலான நாள்களை மாணவர் விடுதியில்தான் கழித்தாராம். அதனால் பிறருடன் நட்பு பாராட்டும் குணம் இயல்பாகவே தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள் ளார்.
"விடுதி வாழ்க்கை என்னைப் பாதிக்கவில்லை. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தாலும் எனது தோழிகள் உடன் இருந்ததால் எந்தவித ஏக்கமும் ஏற்படவில்லை.
"நல்ல நட்பு என் குடும்பத்தையே மறக்கடித்தது. ஆசிரியைகளுடன்கூட மிகவும் அன்பாகப் பழகிய தால், அவர்களை என் தாயைப்போல் மதித்தேன். இப்போது தோழிகள்தான் என் குடும்பம்," என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
அதேசமயம் குடும்பத்தார் ஆதரவு இன்றி தம்மால் திரையுலகில் இவ்வளவு காலம் நிம்மதியாக பணியாற்றி இருக்கமுடியாது என்று குறிப்பிடுபவர், படிப்பில் தாம் சராசரி மாணவிதான் என்கிறார்.
பள்ளியில் பன்னி ரெண்டாம் வகுப்புத் தேர்வில் இவர்தான் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவியாம்.

