காவல்துறையில் சாதாரண காவலராகப் பணியாற்றும் நாயகன், அசாதாரணமாகச் செய்யும் சாகசங்களை வாழ்வியலுடன் சொல்லும் படம் 'லத்தி'. நாயகன் விஷால், நாயகி சுனைனா உட்பட அனைவருமே சிறப்பாக நடித்ததாகப் பாராட்டுகிறார் இயக்குநர் வினோத்குமார்.
சாதாரண காவலரை எப்படி நாயகனாக சித்திரிக்க முடியும் என்று பலரும் கேட்கிறார்களாம்.
"நம்முடைய வாழ்க்கையில் இருந்து ஒரு கதை அல்ல, ஆயிரம் கதைகள் எடுக்க முடியும். இது ஒரு காவலரின் கதை, அவ்வளவுதான்.
"கதாநாயகனின் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கின்றன. அதன் காரணமாக அவர் வெகுண்டு எழுகிறார். அவரது எதிரிகளுக்கு எவ்வாறு பாடம் புகட்டுகிறார் என்பதை சுவாரசியமான திரைக்கதை விவரிக்கும்.
"பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை அதன் இயல்பு கெடா மல் அப்படியே திரையில் காட்டும்போது கச்சிதமாக அமையும். 'லத்தி' படம் அப்படித்தான் உருவாகி உள்ளது," என்கிறார் வினோத்குமார்.
மிருகங்களுக்கு இருக்கும் குணம்தான் நாயகனிடம் வெளிப்படுமாம். அதை தனது நடிப்பில் பக்குவமாகவும் பொருத்தமாகவும் வெளிப்படுத்தி உள்ளாராம் விஷால்.
"சாதாரணமாக ஒரு பாம்பு சிங்கத்தை பார்த்ததும் சீறும். சிங்கத்தை பாம்பு எப்படி தோற்கடித்து உயிர் பிழைத்தது என்பது வியப்பாக இருக்கும். வெறும் வார்த்தையில் சொல்லும்போது சாதாரணமாக இருக்கும். உண்மையில் சிங்கத்தை பாம்பு வீழ்த்திய கதையை 'லத்தி' படத்தில் பார்க்கலாம்.
"பொதுவாக இயக்குநர் என்பவர் ஒரு படத்துக்கு அணித்தலைவர் மாதிரி. அவர்தான் எல்லாரையுமே வழிநடத்துவார். விஷால் சார் அடிப்படையில் இயக்குநர்களுக்கு மரியாதை தரக்கூடியவர். எப் போதுமே இயக்குநர் பாலா குறித்து வியந்து சொல்லிக்கொண்டே இருப்பார். விஷாலும் இயக்குநர் துறையிலிருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். இப்போது அவர் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குகிறார். அதனால் இயக்குநரின் சிரமங்கள் அவருக்குத் தெரியும்.
"மேலும் சண்டைக் காட்சிகளில், மிக ஆபத்தான சூழலில், துணிச்சலாக நடித்தார். மற்றபடி ஏதாவது ஆலோசனைகளைச் சொல்வார். எனது பணியில் அவர் தலையிட்டதே கிடையாது. காட்சிக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை மட்டும் குறைவின்றி வழங்குவார்.
"ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோரை ஒதுக்கிவிட்டு சுனைனாவை ஒப்பந்தம் செய்தது ஏன் என்றும் கேட்கிறார்கள். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் சுனைனா வந்தார். மிகச் சிறப்பாக நடித்தார். அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர். முதல் நாளே தனக்கான வசனங்களைக் கேட்டுப் பெறுவார். ஏன் சுனைனா என்று கேட்டவர்களுக்கு மத்தியில் 'சுனைனாவைப் பார்க்க வாருங்கள்' என்பது மாதிரி நடிப்பில் மிரட்டி உள்ளார். கதைப்படி, அவர் 6 வயது குழந்தைக்குத் தாய். விஷால், சுனைனா உடல்மொழியும் கச்சிதமாக அமைந்துள்ளது. அவர் விருதுக்கு தகுதியான நடிகை," என்கிறார் இயக்குநர் வினோத்குமார்.
, :
விஷால்

