திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
a13e79e9-2282-414e-bc2e-da5b95952ce6
-

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள 'பிரின்ஸ்' படத்தை தீபாவளிப் பண்டிகையையொட்டி எதிர்வரும் அக்டோபர்

21ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்ட மிட்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அச்சமயம் தமிழகத்தில் தொடர்ந்து ஐந்து நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் நன்றாக இருக்கும் எனப் படத்தின் தயாரிப்புத் தரப்பு கருதுகிறதாம். பட வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

 'பொன்னியின் செல்வன்' படத்தில் பங்கேற்றுள்ள கலை ஞர்கள் டுவிட்டர் தளத்தில் தங்களுடைய பெயர்களை

மாற்றி உள்ளனர். நடிகை திரிஷா (படம்), இப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் விக்ரம் 'ஆதித்த கரிகாலன்' வேடத்திலும் நடித்துள்ளனர். இதையடுத்து டுவிட்டரில்

தங்கள் பெயரில் உள்ள கணக்குகளின் பெயரை குந்தவை, ஆதித்த கரிகாலன் என மாற்றிவிட்டனர். கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோரும் விரைவில் டுவிட்டரில் தங்கள் பெயர்களை மாற்றக்கூடும்.

 தமது அடுத்த படம் அதிரடியும் சாகசங்களும் நிறைந்த படமாக உருவாகும் என்கிறார் 'பாகுபலி' புகழ் இயக்குநர் ராஜமௌலி (படம்). புதுப்படத்துக்கான பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், மகேஷ்பாபுவை தன் கதைக்கான நாயகனாக தேர்வு செய் துள்ளாராம். அநேகமாக

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல். "ஹாலிவுட்டில் வெளியான ஜேம்ஸ் பாண்ட், 'இண்டியானா ஜோன்ஸ்' படங்களைப் போல்

பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும்," என கனடாவில் அளித்த ஒரு பேட்டியில் ராஜமௌலி கூறியுள்ளார்.

இந்தப் புதிய படம் சுமார் ரூ.500 கோடி பொருட்செலவில் உருவாக உள்ளதாகவும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக பல்வேறு வகைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த வகையில் 'பொன்னியின் செல்வன்' பட்டுப்புடவைகள் அறிமுகமாகி உள்ளன. அந்தப் படத்தில் நடித்துள்ள திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம்,

கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகியோர் ஏற்றுள்ள கதாபாத்திரங்களின் உருவங்கள் புதிய ரக பட்டுப்புடவைகளில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழுவினர் நம்புகின்றனர்.

இம்மாத இறுதியில் படம் வெளியாகிறது என்பதால் விளம்பரப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய பட்டுப் புடவை விரைவில் சந்தையில் அறிமுகமாகிறது.