'இனி நன்கொடைகள் அளிக்கவேண்டாம்'

'இனி நன்கொடைகள் அளிக்கவேண்டாம்'

1 mins read
4d267572-e50b-4a05-9acd-cc97ce5d7fd1
-

தாம் நல்ல நிலை­யில் இருப்­ப­தால், தமது அறக்­கட்­ட­ளைக்கு பொது மக்­கள் இனி நன்­கொடை அளிக்­க­வேண்­டாம் என நடி­கர் ராகவா லாரன்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

பல திரைப்­ப­டங்­களில் நடிக்க ஒப்­பந்­த­மாகி வரு­வ­தால், மக்­க­ளுக்­குச் சேவை செய்­யும் முழு பொறுப்­பை­யும் தாமே ஏற்க முடிவு செய்­துள்­ள­தாக அவர் சமூக ஊட­கப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எனவே, இனி என் அறக்­கட்­ட­ளைக்கு யாரும் உங்­கள் பணத்தை நன்­கொ­டை­யாக வழங்க வேண்­டாம். மாறாக உங்­க­ளின் ஆசிர்­வா­தம் மட்­டுமே எனக்­குப் போது­மா­னது.

"இத்­தனை ஆண்­டு­க­ளாக எனக்கு கிடைத்த ஆத­ர­வுக்­கும் அன்­புக்­கும் நான் நன்­றி­யுள்­ள­வ­னாக இருக்­கி­றேன்," என்று லாரன்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது 'சந்­தி­ர­முகி-2', 'ருத்­ரன்' உள்­பட பல படங்­களில் நடித்து வரு­கி­றார் லாரன்ஸ்.

நீண்ட கால­மாக தமது பெய­ரில் இயங்­கும் அறக்­கட்­டளை மூலம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், ஏழைக் கலை­ஞர்­க­ளுக்கு அவர் பல்­வேறு வகை­யி­லும் உத­வி­க­ளைச் செய்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், 'சந்­தி­ர­முகி-2' படத்­திற்­காக தமது உடற்­கட்டை மாற்றி அமைக்க முடிவு செய்­துள்ள தாக­வும் தமது டுவிட்­டர் பதி­வில் ராகவா லாரன்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

'சந்திரமுகி-2' திரைப்படம் தமது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என உறுதியாக நம்புகிறாராம் லாரன்ஸ்.

இந்தப் படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.