'இந்த சொப்பன சுந்தரியை அனைவருக்கும் பிடிக்கும்'

'இந்த சொப்பன சுந்தரியை அனைவருக்கும் பிடிக்கும்'

3 mins read
318926ca-a993-43be-aa24-46cc19f5038f
-

'சொப்­பன சுந்­தரி' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் உரு­வா­கும் படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ். சந்­தே­கமே வேண்­டாம். இது நாய­கியை மையப்­ப­டுத்­தும் கதை­தான்.

சென்­னை­யில் உள்ள குடி­சைப் பகு­தி­தான் கதைக்­க­ளம். தனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக தனிப்­பயிற்சி மேற்­கொண்­டா­ராம் ஐஸ்­வர்யா.

"படத்­தின் தலைப்பை அறி­வித்­த­துமே பல­ருக்கு ஆச்­ச­ரி­யம். இதென்ன வித்­தி­யா­ச­மாக உள்­ளதே... என்ன கார­ணம் என்று பல­ரும் கேட்­ட­னர். 'இந்­தி­ர­லோ­கத்து சுந்­தரி' மாதிரி என்று சட்­டென உரு­வ­கப்­ப­டுத்­திட முடி­யாத ஒரு பெயர்­தான் 'சொப்­பன சுந்­தரி'.

"தீவிர சினிமா ரசி­கர்­க­ளுக்கு நினை­வி­ருக்­க­லாம். 'கர­காட்­டக்­கா­ரன்' படத்­தில் வரும் கவுண்­ட­மணி, செந்­தில் நகைச்­சு­வைப் பகு­தி­யில் சொப்­பன சுந்­தரி பெயர் அடி­படும். அன்று முதல் இன்­று­வரை அந்த நகைச்­சுவை குறித்­துப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றோம். 'கர­காட்­டக்­கா­ரன்' படத்­தைக் கொடுத்த கங்கை அம­ரன் சாரோட வாரிசு வெங்­கட்­பி­ர­புவை வைத்து இந்­தப் படத்­தின் தலைப்பை வெளி­யிட்­டோம்," என்­கி­றார் 'சொப்­பன சுந்­தரி' இயக்­கு­நர் எஸ்.ஜி.சார்­லஸ்.

இவர் இதற்கு முன்பு வெங்­கட்­பி­ர­புவை வைத்து 'லாக்­கப்' படத்தை இயக்­கிய அனு­ப­வம் உள்­ள­வர். இப்­போது நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­யு­டன் கள­மி­றங்கி உள்­ளார்.

"கதை­யின் நாயகி 'சொப்­பன சுந்­தரி' யார் என்­ப­தும் அவ­ரது பின்­ன­ணி­யும்­தான் கதை­யின் முக்­கிய அம்­சங்­கள். குற்­றத்­தை­யும் நன்­னெ­றி­யை­யும் குறிப்­பி­டும் வகை­யில் ஒரு திருக்­கு­றள் உள்­ளது. கதை­யின் நாயகி எந்த நேரத்­தில், எப்­ப­டிச் செயல்­ப­டு­வாள் என்­ப­தைக் கணிக்க இய­லாது. தாம் என்ன செய்­கி­றோம் என்­பது சில சம­யங்­களில் அவ­ளுக்கே தெரி­யாது.

"இப்­ப­டிப்­பட்ட குணா­தி­ச­யம் உள்ள பெண்­ணின் பெய­ரும் கணிக்கமுடி­யாத வகை­யில் இருக்க வேண்­டும் என விரும்­பி­னேன். அப்­போ­து­தான் இந்­தப் பெயர் அமைந்­தது," என்­கி­றார் சார்­லஸ்.

இது 'டார்க் காமெடி' என்று குறிப்­பி­டப்­படும் எதிர்­மறை நகைச்­சு­வை­யு­டன் கூடிய பட­மாம். பொது­வாக இது­போன்ற நகைச்­சு­வைப் பகு­தி­கள் படித்­த­வர்­க­ளுக்கு மட்­டும்­தான் புரி­யும் என்­பதை தம்­மால் ஏற்க இய­லாது என்­ப­வர், அனை­வ­ருக்­கும் புரி­யும் வகை­யில் நகைச்­சு­வைப் பகு­தியை அமைத்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"ஐஸ்­வர்யா ராஜே­ஷின் உழைப்பு என்னை வியக்க வைக்­கிறது. இந்­தக் கதைக்­காக அவர் கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றார். இந்­தக் கதை நடக்­கும் குடி­யி­ருப்­புப் பகுதி, அங்­குள்ள மக்­க­ளின் வாழ்­வி­யல், உடல்­மொழி என அனைத்­தை­யும் விவ­ரிக்­கும் வகை­யில் ஒரு குறும்­ப­டமே எடுத்­து­விட்­டோம். அதை ஐஸ்­வர்­யா­விடம் தந்­த­தும், சிறப்­புப் பயிற்சி மேற்­கொண்­டார். குறும்­ப­டத்­தில் பார்த்த மக்­க­ளின் இயல்பு­களை மிக நேர்த்­தி­யாக தமது நடிப்­பில் வெளிப்­ப­டுத்­தி­னார்.

"அவர் நல்ல கதை­க­ளா­கத் தேடி, தேர்வு செய்­கி­றார். கதைத் தேர்­வும் அதற்­கான உழைப்­பும் மற்ற இளம் நடி­கை­கள் பின்­பற்றவேண்­டிய ஒன்று. குறும்­ப­டத்தை பார்த்து மட்­டுமே அவர் தயா­ரா­ன­தா­கச் சொல்­லி­விட முடி­யாது. அவ­ரும் தன் பங்­குக்கு தக­வல்­க­ளைத் தேடிப் பிடிக்­கி­றார். அதற்­கேற்ப நடிப்­பை­யும் மெரு­கேற்­றிக் கொள்­கி­றார்," என்­கி­றார் சார்ல்ஸ்.

'சூது கவ்­வும்', 'டாக்­டர்' படங்­களில் ரசி­கர்­கள் பார்த்து ரசித்த நகைச்­சுவை­யின் சாயலை இந்­தப் படத்­தி­லும் பார்க்க முடி­யு­மாம். சிரிப்­ப­தற்கு யோசிக்க வேண்­டிய அவ­சி­யம் இல்­லாத நகைச்­சுவை காட்­சி­கள் இருக்­கும் என்­கி­றார்.

"திரு­ம­ண­மா­காத நாயகி நன்கு படித்­த­வர். அவ­ருக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. மூவ­ரும் தாயா­ரு­டன் வசித்து வரு­கின்­ற­னர்.

"அம்­மாவாக தீபா சங்­கர், நாயகி­யாக ஐஸ்­வர்யா ராஜேஷ் நடிக்க, லட்­சு­மிப்­ரியா, சுனில் ரெட்டி, கிங்ஸ்லி, கரு­ணா­க­ரன், மைம்­கோபி, பிஜான், சாரா என்று மேலும் பலர் உள்­ள­னர்.

"அரு­மை­யான தொழில்­நுட்­பக் குழு­வும் அமைந்­துள்­ளது. விக்­னேஷ், ராஜ­கோ­பா­லன் என்று இரு ஒளிப்­ப­தி­வா­ளர்­கள் பணி­யாற்றி உள்­ள­னர். அஜ்­மல் தக்­சீன் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார்.

"முழுக்க முழுக்க சென்­னை­யில் காட்சி ­க­ளைப் பட­மாக்கி உள்ளோம். குடி­சைப் பகு­தி­களில் எடுக்கவேண்­டிய காட்­சி­க­ளுக்­காக தனி அரங்கு அமைத்­தோம்.

"நாய­கியை மையப்­ப­டுத்தி படம் எடுக்­கும்­போது தயா­ரிப்­புச் செலவு குறை­கிறது. அதே­ச­ம­யம் யதார்த்­த­மான, நல்ல கதை அமைந்­தால்­தான் குறைந்த செல­வில் திட்­ட­மிட்டு ஒரு படத்தை உரு­வாக்க முடி­யும்.

"இந்­தப் படத்­தில் அனைத்­தும் நல்­ல­வி­த­மாக அமைந்­த­தால், நல்ல படைப்­பாக உரு­வாகி உள்ளது," என்­கி­றார் இயக்­கு­நர் சார்ல்ஸ்.

, :

  