திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
205def0b-02b7-4495-acee-16ed00c68a68
-
multi-img1 of 4

 'ஹரிதாஸ்' படத்தில் இருந்துதான் 'சினம்' படத்துக்கான கதைக் கருவை கண்டறிந்ததாகச் சொல்கிறார் இயக்குநர் குமாரவேலன்.

அனைவருக்கும் பிடித்தமான படைப்புகளை தருவதே தமது இலக்கு என்கிறார்.

'ஹரிதாஸ்' படத்திற்குப் பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையைப் பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் மூழ்கிவிட்டார். நானும் 'வாகா' படத்திற்குள் போய்விட்டேன். இப்போது 'சினம்' நல்ல படமாக உருவாகி உள்ளது என்கிறார் குமாரவேலன்.

 சிம்பு மிக விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்றும் அவருக்கான வரன் அமைய இறைவனை வேண்டுவதாகவும் நடிகை சித்தி இட்னானி கூறியுள்ளார்.

இவர் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், "காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சித்தி இட்னானி, "அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திருமணமாகாத இளையர்களில் அதிகமான தகுதிகளைக் கொண்டவர் சிம்பு என்பதால், காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்," என்றார்.

 அண்மைய பேட்டியில் தமது முதல் முத்த அனுபவம் குறித்து பேசி உள்ளார் ரெஜினா.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

"ஒருமுறை பெண் ஒருவர் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந் தால் கண்டிப்பாக அறைந்திருப் பேன்," என்கிறார் ரெஜினா.

 'ஜெர்மன்' என்ற தலைப்பில் தமது கனவுப் படத்தை இயக்கப் போவதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா நாயகன் என்றும் அவருக்கான கதையை மெருகேற்றி வருவதாகவும் கூறுகிறார் ரஞ்சித். இந்நிலையில் இது குண்டர் கும்பலைப் பற்றிய படம் என்று வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.

 நீண்ட இடைவெளிக்குப்பின் 'தமிழ்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார் சேரன். இது ஒரு தனி மனிதனின் குடியுரிமையைப் பற்றிய படம் என்கிறார் இயக்கு நர் இசக்கி கார்வண்ணன்.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் லால், துருவா, ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி, ரவிமரியா, மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர் எம்.கே.ஆர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

"தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் சமுதாய சமநிலை பற்றியும் இந்தப் படம் பேசும். இவை குறித்து இது வரை கூறப்படாத தகவல்களு டன் மிக வித்தியாசமான கோணத்தில் படம் இருக்கும். இக்கதைக்கு சேரன் பொருத்த மாக உள்ளார்," என்கிறார் இசக்கி கார்வண்ணன்.