உயிருக்குப் போராடும் பழம்பெரும் நடிகை

உயிருக்குப் போராடும் பழம்பெரும் நடிகை

1 mins read
3a83204c-af81-494f-b503-824f43381295
-
Google News Preferred Icon

பழம்பெரும் நடிகை ஜெயக் குமாரி இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.

'நூற்றுக்கு நூறு', 'எங்கிருந்தோ வந்தாள்', 'வைரம்', உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் பிற மொழிகளிலும் இருநூற்றுக் கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயக்குமாரி.

வில்லியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் அதிகம் நடித்துள்ள இவர், கணவர் இறந்த பின்னர் மகனுடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு திரையுலகத்தினர் யாரும் உதவவில்லை.