திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
3908849c-acd3-4390-a9df-f10793b1d09f
-
multi-img1 of 3

 'பாகுபலி' நாயகன் பிரபாசும் நடிகை அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் தகவல் பரவியுள்ளது. அண்மையில் தெலுங்கு திரை யுலகப் பிரமுகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தபோது, இருவரும் சேர்ந்து சென்று அவரிடம் நலம் விசாரித்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் விரும்பினாராம் அந்தப் பிரமுகர். அவர் காலமாகிவிட்ட நிலையில், அனுஷ்காவும் பிரபாசும் திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

 உலகளவில் பல்வேறு விருதுகளைப் பெற்ற 'வெர்டிஜ்' எனும் கனடா நாட்டின் இணையத்தொடர் 'பால்' என்ற தலைப்பில் தமிழிலும் இதர தென்னிந்திய மொழிகளிலும் மறுபதிப்பாகிறது. இதில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.

இளம் பெண் ஒருவர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கி றாள். எனினும், அவள் காப்பாற்றப்படுகிறாள்.

மேலும், தனது கடைசி 24 மணி நேர நினைவுகள் தவிர மற்ற அனைத்தும் அவருக்கு மறந்துவிடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இத்தொடரின் கதையாம்.

எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, 'தலைவாசல்' விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்து, இயக்குகிறார் சித்தார்த் ராமசாமி. அஜேஸ் இசை அமைக்கிறார்.

 வாய்ப்பு கிடைத்தால் கதா நாயகிகள் தங்கள் சம்பளத்தை உயர்த்திக்கொள்வது வழக்கம்.

எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இவ்வாறு செய்வார்கள். ஆனால், ராஷ்மிகா மந்தனா கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

'புஷ்பா' தெலுங்குப் படம் வெளியானது முதல் தனது சம்பளத்தை இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தினார்.

பின்னர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடிக்கத் தொடங்கி யதும் ராஷ்மிகாவின் சம்பளம் ரூ.4 கோடியானது. இப்போது ஐந்து கோடி ரூபாய் கேட்பதாகத் தகவல்.