'விஜய் அனைவரையும் கவரக்கூடிய, முன்மாதிரியான நடிகர் என்று நடிகை கிருத்தி ஷெட்டி கூறியுள்ளார்.
அண்மையில் ரசிகர்களுடன் இணையம் வழி கலந்துரையாடிய அவர், சூர்யாவுடன் 'வணங்கான்' படத்தில் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களை ஏற்றுள்ளதாக வும் அதில் இளவயது சூர்யாவுக்கு கிருத்தி ஷெட்டி ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருப்பதாக கலந்துரையாடலின்போது கிருத்தி தெரிவித்தார்.
'டாக்டர்', 'எதற்கும் துணிந்தவன்', 'டான்' ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார் பிரியங்கா அருள்மோகன்.
தற்போது நடித்துவரும் படத்தில் எத்தகைய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்பதை தெரிவிக்க இயலாது. எனினும் இதுவரை நான் ஏற்ற கதாபாத்திரங்களில இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
"ரஜினியுடன் ஒரு படத்திலாவது, குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இணைந்து நடிக்கவேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. எனக்கும் அந்த ஆசை உண்டு என்றாலும், 'ஜெயிலர்' படத்தில் நான் நடிக்கவில்லை. யாரோ கிளப்பிவிட்ட வதந்தி இது. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவருடன் நடிப்பேன்," என்கிறார் பிரியங்கா.
நடிகர் சூர்யா, இயக்குநர் சிவாவுடன் இணையும் 'சூர்யா 42' படத்தில் ஐந்து தோற்றங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் காணொளி வடிவிலான முதல் தோற்றத்தில் போர்க்களக் காட்சி இடம்பெற்றுள்ளது.
அதில், சூர்யா போர் வீரனாகத் தோன்றுவதுடன், போரில் சண்டையிடுபவர் களாக அரத்தர், வெண்காட் டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன. இந்த ஐந்து கதாபாத்திரங்களிலும் சூர்யாவே நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

