'குடும்ப வாழ்வின் ஏற்ற இறக்கங்களை விவரிக்கும் படம்'

'குடும்ப வாழ்வின் ஏற்ற இறக்கங்களை விவரிக்கும் படம்'

2 mins read
f676d034-a941-4ea8-90fa-0d114181c07f
'குட்பை' படத்தின் படப்பிடிப்பில் அமிதாப், ராஷ்மிகா. -

இந்­தித் திரை­யு­ல­கி­லும் நல்ல பெயரை சம்­பா­தித்­துள்­ளார் ராஷ்­மிகா மந்­தனா.

அதி­லும் அமி­தாப் பச்­ச­னு­டன் திரை­யைப் பகிர்ந்து கொள்­வது குறித்து அவர் அளித்த பேட்­டி­களுக்கு இந்தி ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்துள்ளது.

அண்­மைய பேட்டி ஒன்­றில், 'நான் ஒரு பஞ்சு போன்­ற­வள். அத­னால், என்­னு­டன் நடிக்­கும் நடி­கர்­க­ளின் திற­மை­களை உறிஞ்சிக் கொள்­வேன்' என்று ராஷ்­மிகா கூறி­யதை திரை­யு­ல­கத்­தி­னர் மிக­வும் ரசித்து பாராட்டி உள்­ள­னர்.

ராஷ்­மி­கா­வைப் பொறுத்­த­வரை, எப்­போ­துமே கல­க­லப்­பா­க­வும் புன்­சி­ரிப்­பு­ட­னும் காணப்­ப­டு­ப­வர்.

உடன் நடிக்­கும் கலை­ஞர்­க­ளி­டம், குறிப்­பாக கதா­நா­ய­கர்­க­ளி­டம் மிக­வும் இயல்­பா­கப் பேசி தனது நட்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­து­வி­டு­வார்.

விஜய்­யு­டன் இணைந்து நடிக்­கும் படத்­துக்­கான பூசை போடப்­பட்­ட­போது, அவர் செய்த சேட்­டை­களை விஜய் ரசி­கர்­கள் இன்­னும் ரசித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், ஏக்தா கபூ­ரின் தயா­ரிப்­பில் உரு­வா­கி­யுள்ள 'குட்பை' என்ற இந்தி திரைப்­ப­டத்­தில் அமி­தாப்­பு­டன் நடித்­துள்­ளார் ராஷ்­மிகா.

"குடும்­பத்­தின் முக்­கி­யத்­து­வம், ஒவ்­வொரு சூழ­லி­லும் வாழ்க்­கையை எவ்­வாறு கொண்­டாட வேண்­டும், அர்த்­த­முள்­ள­தொரு வாழ்வை வாழ உத­வக்­கூ­டிய அம்­சங்­கள் குறித்து இந்­தப் படம் விவ­ரிக்­கும்.

"மேலும் சுய உண்­மையை அறி­தல் (தன்­னிலை, தன்­ம­திப்பு போன்­ற­வற்றை அறி­தல்) ஆகி­யவை இப்­படத்­தில் அழ­காக வர்­ணிக்­கப்­பட்டு உள்­ளன.

"ஒவ்­வொரு குடும்­ப­மும் எதிர்­கொள்­ளும் வாழ்­வின் ஏற்ற, இறக்­கங்­களை யதார்த்­த­மான காட்சி, வச­னங்­கள் மூலம் பதிவு செய்­துள்­ளார் இயக்­கு­நர்.

"இந்­தப் படத்­தில் நடித்த பின்­னர் என்­னுள் நிறைய மாற்­றங்­கள் ஏற்­பட்­ட­தாக உணர்­கிறேன்," என்­கி­றார் ராஷ்­மிகா.

தமது திரைப் பய­ணத்தை இனி 'குட்பை' படத்­துக்கு முன், பின் எனப் பிரித்­துக் கொள்­ள­லாம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அமி­தாப்­புடன் இணைந்து நடித்த பின்­னர் தாம் முதிர்ச்­சி­யான நாய­கி­யாக உரு­வெ­டுத்­துள்­ள­தாக எண்­ணத் தோன்­று­கிறது என்­கி­றார்.

"அமி­தாப் பச்­சன் மற்ற அனை­வ­ரை­யும்­விட சிறந்த ஆசான் என்­பேன். புக­ழின் உச்­சியை எப்­போதோ தொட்­டு­விட்­ட­வர்.

"இருப்­பி­னும் எளி­மை­யான மனி­த­ரா­கப் பேசிப் பழ­கு­கி­றார். படப்­பி­டிப்­புக்கு முந்­தைய நாள் வரை அவ­ரைப் பற்­றிய பயம் இருந்­தது. ஆனால் முதல்­ நா­ளன்றே என் மன­தில் இருந்த பயம் நீங்­கி­விட்­டது. கார­ணம் அவ­ரது நட்­பான, பாச­மான அணு­கு­முறை," என்­கி­றார் ராஷ்­மிகா.