தமன்னா பட நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள்

தமன்னா பட நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள்

1 mins read
86403108-7d9d-4866-9083-25f22eefea71
'பப்ளி பவுன்சர்' படத்தின் சுவரொட்டியில் தமன்னா. -

தமன்னா பட நிகழ்ச்­சி­யில் செய்தி­யா­ளர்­கள் தாக்­கப்­பட்­ட­தற்கு கடும் கண்­ட­னம் எழுந்­துள்­ளது.

தென்­னிந்­திய மொழி­களில் வாய்ப்­பு­கள் குறைந்து வரும் நிலையில் இந்­தி­யில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் தமன்னா.

அவ­ரது நடிப்­பில் உரு­வாகி உள்ள 'பப்ளி பவுன்­சர்' படம் எதிர்­வரும் 23ஆம் தேதி நேர­டி­யாக ஓடிடி தளத்­தில் வெளி­யா­கிறது.

இந்­நி­லை­யில், தனது சமூக ஊட­கங்­களில் சில கவர்ச்­சிப் படங்­களை அடுத்­த­டுத்து வெளி­யிட்டு வரு­கி­றார் தமன்னா. மேலும், 'பப்ளி பவுன்­சர்' படத்­தின் விளம்­பர நிகழ்ச்சி­க­ளி­லும் பங்­கேற்­கி­றார்.

ஹைத­ரா­பாத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யின்­போது அவ­ரைப் பட­மெ­டுக்க செய்­தி­யா­ளர்­கள் குவிந்­த­னர். அவர்­க­ளுக்­கு 'போஸ்' கொடுக்க தமன்னா முன்­வந்­த­போதும், உடன் வந்த பாது­கா­வலர்­கள் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை.

இத­னால் இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. ஒரு­கட்­டத்­தில் தமன்­னா­வின் பாது­கா­வ­லர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளைத் தாக்­கி­ய­தாகக் கூறப்­ப­டு­கிறது. அது தொடர்­பான புகைப்­ப­டங்­கள் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்­ளன.