கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்ட பிறகு தமிழ்த் திரையுலகத்தினரின் சுறுசுறுப்பு அதிகரித்துள்ளது. அதன் பலனாக வாரந்தோறும் குறைந்தபட்சம் நான்கைந்து படங்கள் வெளியீடு காண்கின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி ஏழு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய நாள், அதாவது செப்டம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடித்த 'நானே வருவேன்' படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 23ஆம் தேதி குறைந்த செலவில் உருவாகி உள்ள ஏழு படங்கள் வெளியாகக்கூடும்.
'ஆதார்', 'பபூன்', 'ரெண்டகம்', 'ட்ரிக', 'ட்ராமா', 'கெத்துல', 'குழலி' ஆகிய படங்கள் வெளியீடு காண காத்திருக்கின்றன.

