அஜித் படத்தின் மறுபதிப்பில் சல்மான் கான்

அஜித் படத்தின் மறுபதிப்பில் சல்மான் கான்

1 mins read
Google News Preferred Icon

'வீரம்' படத்தின் இந்தி மறுபதிப்பில் பூஜா ஹெக்டேவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'வீரம்'.

இதையடுத்து இப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய் கின்றனர். சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார்.

'கிசி கா பாய் கிசி கி ஜான்' என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல். இதற்கு, 'யாரோ ஒருவரின் சகோதரர், யாரோ ஒருவரின் அன்புக்குரியவர்' என்று அர்த்தம்.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் பூஜா ஹெக்டே.